'அவ்வளவு சுலபமாக பாகிஸ்தானுக்கு 2 புள்ளிகளை விட்டுகொடுக்கக் கூடாது'- சச்சின் ட்வீட்

Updated: 23 February 2019 13:06 IST

புல்வாமா தாக்குதலுக்குப் பின் இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடக் கூடாது என கருத்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Sachin Tendulkar Wants India To Beat Pakistan In World Cup Once Again
ஜுன் 16 ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது © AFP

முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் கருத்து, பிசிசிஐ அறிக்கை, மக்களின் ஆதங்கம் என பல தரப்பட்ட எதிர்ப்பால் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பைப் போட்டி திட்டமிட்டபடி ஜுன் 16 ஆம் தேதி நடைபெறுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்குப் பின் இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடக் கூடாது என கருத்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

2019 உலகக் கோப்பைத் தொடரில் ஜுன் 16 ஆம் தேதி, இந்தியா அணி பாகிஸ்தானை மான்செஸ்டரில் எதிர்கொள்ள இருக்கிறது. இந்நிலையில், இது குறித்து சச்சின் தனது நிலைப்பாட்டை ட்வீட் செய்துள்ளார்.

‘உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்துப் போட்டியிலும் இந்தியாதான் வென்றுள்ளது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாட மறுத்தால், அது இந்தியாவிற்குத்தான் பின்னடைவு. எளிதாக பாகிஸ்தானுக்கு இரண்டு புள்ளிகள் வழங்க நான் விரும்பவில்லை' என சச்சின் ட்வீட் செய்துள்ளார்.

‘எனது நாடு தான் எனக்கு முக்கியம். அதனால் இந்தியா எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நான் துணை நிற்பேன்' எனவும் சச்சின் கருத்து தெரிவித்துள்ளார்.

2019 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டி இங்கிலாந்தில் மே மாதம், 30 ஆம் தேதி துவங்க உள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • மான்செஸ்டரில் ஜுன் 16 ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது
  • தன் நிலைப்பாட்டை சச்சின் ட்வீட் செய்துள்ளார்
  • பாகிஸ்தானை இந்தியா வீழ்த்த வேண்டும் என சச்சின் ட்வீட் செய்துள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
சச்சினின் டெஸ்ட் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து பவுலர்!
சச்சினின் டெஸ்ட் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து பவுலர்!
#On This Day
#On This Day 'காட் ஆஃப் கிரிக்கெட்' தன்னுடைய முதல் சதமடித்த நாள் இன்று!
ஹஷிம் ஆம்லாவின் ஓய்வுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
ஹஷிம் ஆம்லாவின் ஓய்வுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
"2003 உலகக் கோப்பையில் தோற்க வாக்கார் யூனிஸ்தான் காரணம்" - சோயிப்அக்தர்
"2003 உலகக் கோப்பையில் தோற்க வாக்கார் யூனிஸ்தான் காரணம்" - சோயிப்அக்தர்
கம்-பேக் டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்த ஸ்மித்...!
கம்-பேக் டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்த ஸ்மித்...!
Advertisement