பவுண்டரி விதிகளை மாற்றியது ஐசிசி - வரவேற்கும் சச்சின் டெண்டுல்கர்!

Updated: 17 October 2019 11:51 IST

ஜூலை மாதம் நடைபெற்ற ஆண்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் முடிவு குறித்த சலசலப்பைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதன் அனைத்து முக்கிய போட்டிகளுக்கும் சூப்பர் ஓவர் விதியை மாற்றியது.

Sachin Tendulkar Terms ICC
பவுண்டரி கணக்கை நிறுத்த ஐசிசி எடுத்த முடிவை சச்சின் டெண்டுல்கர் வரவேற்றார். © Twitter

சச்சின் டெண்டுல்கர் பரிந்துரைத்தது போலவே, உலகக் கோப்பை போன்ற உலகளாவிய போட்டிகளில் நாக் அவுட் ஆட்டங்களை தீர்மானிக்கும் ஒரு வழியாக பவுண்டரி கணக்கை நிறுத்த ஐசிசி எடுத்த முடிவை புதன்கிழமை கிரிக்கெட் லெஜண்ட் வரவேற்றார். ஜூலை மாதம் நடைபெற்ற ஆண்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் முடிவு குறித்த சலசலப்பைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதன் அனைத்து முக்கிய போட்டிகளுக்கும் சூப்பர் ஓவர் விதியை மாற்றியது. பவுண்டரி கணக்கை வைத்து நியூசிலாந்திற்கு எதிராக ஆடிய இங்கிலாந்து வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டது. துபாயில் நடந்த வாரியக் கூட்டங்களுக்குப் பிறகு, எதிர்கால உலகளாவிய போட்டிகளின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில், அணிகள் தங்கள் சூப்பர் ஓவர்களில் அதே எண்ணிக்கையிலான ரன்களை அடித்தால், ஒரு பக்கம் வெல்லும் வரை சூப்பர் ஓவர் செயல்முறை மீண்டும் செயல்படுத்தப்படும் என்று ஐசிசி முடிவு செய்தது.

"2 அணிகளை வேறு எதுவும் பிரிக்காதபோது ஒரு முடிவைப் பெறுவது நியாயமான வழி என்பதால் இது முக்கியமானது என்று நான் உணர்ந்தேன்" என்று சச்சின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக ட்விட் செய்துள்ளார்.

ஜூலை 14ம் தேதி நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் வெற்றியாளர்களாக இங்கிலாந்து தேர்வு செய்யப்பட்டது. அதிக எண்ணிக்கையிலான பவுண்டரிகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இங்கிலாந்து 22 பவுண்டரிகள் மற்றும்2 சிக்ஸர்கள் எடுத்திருந்தது. ஆனால் நியூசிலாந்து வெறும் 16 பவுண்டரிகள் மட்டுமே எடுத்தது. இறுதிப் போட்டி மற்றும் சூப்பர் ஓவர் இரண்டுமே ட்ராவில் முடிந்தது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, டெண்டுல்கர் பவுண்டரி விதிககு பதிலாக இரண்டாவது சூப்பர் ஓவர் இருக்கலாம் என்று பரிந்துரைத்தார்.

பல முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்த விதியை விமர்சித்தனர், இது விளையாட்டின் நிர்வாகக் குழுவை மறுபரிசீலனை செய்யத் தூண்டியது.

ஐ.சி.சி திங்களன்று ஒரு அறிக்கையில், "குழு நிலைகளில், சூப்பர் ஓவர் ட் ராவானால், போட்டி சமநிலையில் இருக்கும். அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில், எதிரணியை வெல்வதை விட அதிக ரன்கள் எடுப்பதற்கான அடிப்படைக் கொள்கையின்படி சூப்பர் ஓவர் ஒழுங்குமுறைக்கு ஒரு மாற்றம் உள்ளது. ஒரு அணி மற்ற அணியை விட அதிக ரன்கள் பெறும் வரை சூப்பர் ஓவர் மீண்டும் நிகழும்." என்று கூறியது.

எவ்வாறாயினும், இந்த மாற்றம் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் மற்றும் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிரேக் மெக்மில்லன் ஆகியோருக்கு சாதகமாக இருக்கவில்லை. இருவரும் அதை தாமதமாக எடுத்த முடிவு என்று கேலி செய்தனர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
புதிய வகை சிலந்திக்கு சச்சின் டெண்டுல்கர் என்று பெயரிடப்பட்டுள்ளது!
புதிய வகை சிலந்திக்கு சச்சின் டெண்டுல்கர் என்று பெயரிடப்பட்டுள்ளது!
ஒருநாள் போட்டியில் "25 ஓவர்களில் 2 இன்னிங்ஸ்களில் மாற்றம் தேவை" - டெண்டுல்கர்
ஒருநாள் போட்டியில் "25 ஓவர்களில் 2 இன்னிங்ஸ்களில் மாற்றம் தேவை" - டெண்டுல்கர்
"பகல்-இரவு டெஸ்ட்டுக்கு சச்சினை அழைத்து வர முயற்சிப்பேன்" - சவுரவ் கங்குலி!
"பகல்-இரவு டெஸ்ட்டுக்கு சச்சினை அழைத்து வர முயற்சிப்பேன்" - சவுரவ் கங்குலி!
"லாராவின் சாதனையை சச்சின் மிஞ்சிய தினம் இன்று" - வீடியோ பதிவிட்ட பிசிசிஐ!
"லாராவின் சாதனையை சச்சின் மிஞ்சிய தினம் இன்று" - வீடியோ பதிவிட்ட பிசிசிஐ!
பவுண்டரி விதிகளை மாற்றியது ஐசிசி - வரவேற்கும் சச்சின் டெண்டுல்கர்!
பவுண்டரி விதிகளை மாற்றியது ஐசிசி - வரவேற்கும் சச்சின் டெண்டுல்கர்!
Advertisement