"அவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா?" - ரசிகர்களிடம் உதவி கேட்ட டெண்டுல்கர்!

Updated: 16 December 2019 12:53 IST

சச்சின் டெண்டுல்கர் சென்னையில் நடந்த ஒரு டெஸ்ட் தொடரின் போது சந்தித்த தனது ரசிகர், ஹோட்டல் ஊழியரை சமூக ஊடகங்களில் தேடி வருகிறார்.

Sachin Tendulkar Recalls "Memorable Encounter" With Hotel Staffer, Asks Fans For Help
சச்சின் டெண்டுல்கர் தனது ஒரு ரசிகரைத் தேடத் தொடங்கினார். © Twitter

சச்சின் டெண்டுல்கர் சென்னையில் நடந்த ஒரு டெஸ்ட் தொடரின் போது சந்தித்த தனது ரசிகர், ஹோட்டல் ஊழியரை சமூக ஊடகங்களில் தேடி வருகிறார். இதை "மறக்கமுடியாத சந்திப்பு" என்று அழைத்த பேட்டிங் லெஜண்ட் தனது மற்ற ரசிகர்களை ஹோட்டல் பணியாளரைக் கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார்.  "ஒரு சந்திப்பு மறக்கமுடியாதது! ஒரு டெஸ்ட் தொடரின் போது சென்னையின் தாஜ் கோரமண்டலில் ஒரு பணியாளரை நான் சந்தித்தேன், அவருடன் எனது முழங்கை பாதுகாக்கும் கருவி பற்றி விவாதித்தேன், அதன் பிறகு அதை மறுவடிவமைப்பு செய்தேன். அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது மற்றும் அவரை பார்க்க விரும்புகிறேன். ஹே நெட்டிசன்கள், அவரைக் கண்டுபிடிக்க எனக்கு உதவ முடியுமா?" என்று பதிவிட்டிருந்தார்.

ஒரு நிமிடம் மற்றும் 13 வினாடி நீள வீடியோவில், "நீங்கள் ஒரு கவசத்தை அணியும்போதெல்லாம், உங்கள் பேட் ஸ்விங் மாறும் என்பதை நான் கவனித்தேன் என்று அவர் கூறினார்" என்று டெண்டுல்கர் கூறினார்.

"அவர் ஒரு பெரிய ரசிகர் என்றும், ஒவ்வொரு பந்தையும் ஐந்து முதல் ஏழு முறை ரீவைண்ட் செய்து பார்ப்பார் என்றும் அவர் கூறினார்"

ஹோட்டல் ஊழியரைப் கண்டுபிடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்திய டெண்டுல்கர், முழங்கை பாதுகாக்கும் கருவி குறித்து இவ்வளவு சிறிய விவரங்களை கண்டுபிடித்த ஒரே நபர் அவர் தான் என்றார்.

"நான் சொன்னேன், ஆம்! உலகில் நீங்கள் மட்டுமே இதைக் கண்டுபிடித்தீர்கள். நான் உண்மையில் கீழே இருந்து என் அறைக்கு வந்து என் முழங்கை பாதுகாக்கும் கருவியை சுமந்து அதை மறுவடிவமைத்தேன் என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்: சரியான அளவு, சரியான அளவு திணிப்பு, பட்டைகள் இருக்க வேண்டிய இடம் மற்றும் அதெல்லாம் மாற்றியமைத்தேன்”என்று டெண்டுல்கர் கூறினார்.

சச்சின் 200 டெஸ்ட் மற்றும் 463 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். இந்தியாவுக்காக 15,921 டெஸ்ட் ரன்களையும், 18,426 ஒருநாள் ஓட்டங்களையும் அவர் பெற்றுள்ளார். மேலும், அவரின் பெயருக்கு கீழ் 100 சதங்களும் உள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • டெண்டுல்கர் தனது ஒரு ரசிகரைத் தேடத் தொடங்கினார்
  • பேட்டிங் லெஜண்ட் அவருக்கு உதவுமாறு அவரது மற்ற ரசிகர்களைக் கேட்டுகொண்டார்
  • சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்
தொடர்புடைய கட்டுரைகள்
இதுக்குத்தானே காத்துக்கெடந்தோம்...- ஓய்வுக்குப் பின்னர் முதன்முறையாக கிரிக்கெட் களத்தில் சச்சின்!
'இதுக்குத்தானே காத்துக்கெடந்தோம்...'- ஓய்வுக்குப் பின்னர் முதன்முறையாக கிரிக்கெட் களத்தில் சச்சின்!
‘கோப்பையை வெல்வீர்கள்!’ – இந்திய கிரிக்கெட் ஜூனியர் அணிக்கு நம்பிக்கையூட்டிய சச்சின்!!
‘கோப்பையை வெல்வீர்கள்!’ – இந்திய கிரிக்கெட் ஜூனியர் அணிக்கு நம்பிக்கையூட்டிய சச்சின்!!
யுவராஜ் சிங் எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட சச்சின் டெண்டுல்கர்!
யுவராஜ் சிங் எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட சச்சின் டெண்டுல்கர்!
“என்னைப் போன்ற வீரர் இவர்” - ஆஸி.வீரர் குறித்து பேசிய டெண்டுல்கர்!
“என்னைப் போன்ற வீரர் இவர்” - ஆஸி.வீரர் குறித்து பேசிய டெண்டுல்கர்!
புஜாரா பிறந்தநாளுக்கு குஜராத்தியில் வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
புஜாரா பிறந்தநாளுக்கு குஜராத்தியில் வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
Advertisement