Listen to the latest songs, only on JioSaavn.com
 

“நான் தவறாக கூறவில்லை...” - மீண்டும் டெண்டுல்கரை கிண்டல் செய்த கங்குலி!

Updated: 18 February 2020 13:37 IST

சமீபத்தில் சச்ச்னின் டெண்டுல்கர் பதிவிட்ட புகைப்படத்துக்கு, அவர் அதிகமான விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழிப்பதாக கங்குலி கூறியிருந்தார்.

Sachin Tendulkar Posts Picture From Berlin Visit, Sourav Gangulys Hilarious Comment Steals The Show
சச்சின் டெண்டுல்கர் தான் பெர்லின் சென்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். © AFP

சச்சின் டெண்டுல்கர், திங்களன்று ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் சென்று அங்கிருந்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். லாரஸ் விளையாட்டு விருதுகளுக்காக சச்சின் டெண்டுல்கர் பெர்லினில் உள்ளார். முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் புகைப்படம் பதிவிட்ட சிறிது நேரத்தில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, ஒரு கிண்டலான கமெண்ட்டுடன் பதிலளித்தார். சமீபத்தில் சச்ச்னின் டெண்டுல்கர் பதிவிட்ட புகைப்படத்துக்கு, அவர் அதிகமான விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழிப்பதாக கங்குலி கூறியிருந்தார். அந்த கமெண்ட்டை நினைவுப்படுத்தி இப்போது, “டெண்டுல்கர்... நான் தவறாக கூறவில்லை...” என்று கங்குலி கமெண்ட் செய்துள்ளார்.

"விடுமுறையை கொண்டாட சிலருக்கு அதிர்ஷடம் கிடைக்கிறது” என்று டெண்டுல்கரின் பதிவில் கங்குலி ஹிந்தியில் கமெண்ட் செய்திருந்தார்.

கங்குலிக்கு பதிலளித்த டெண்டுல்கர், புஷ்ஃபயர் கிரிக்கெட் பேஷின் போது அவர்கள் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டியதால் இது ஒரு பயனுள்ள விடுமுறை என்று கூறினார்.

2m2l7418Photo Credit: Instagram

மெல்போர்ன் ஜங்ஷன் ஓவலில் ஆஸ்திரேலிய புஷ் ஃபயர் நிவாரணத்துக்கு உதவுவதற்காக விளையாடிய போட்டிய போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஒரு ஓவர் பேட் செய்தார். 

ஐந்தரை ஆண்டுகள் கழித்து களத்தில் கிரிக்கெட் விளையாடிய முன்னாள் இந்திய பேட்ஸ்மேன், ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் எல்லிஸ் பெர்ரி வீசிய ஓவரை பேட் செய்தார். 

ஆஸ்திரேலிய காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தோடு, நிவாரணம் திரட்ட புஷ்ஃபயர் கிரிக்கெட் பேஷ் நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.

இந்த காட்டுத்தீயில் 33 உயிர்கள் பறிக்கப்பட்டன. மேலும், ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்து போயின.

அந்த நாட்டு ஜாம்பவான்களான ரிக்கி பாண்டிங் லெவன் மற்றும் கில்கிறிஸ்ட் லெவன் ஆகிய இரு அணிகள் ஆடத் தயாராகின. பாண்டிங் வழிநடத்தும் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராக இருந்தார்.

ரிக்கி பாண்டிங் லெவன் அணியை விட ஆடம் கில்கிறிஸ்ட் அணி ஒரு ரன் குறைவாக எடுத்தது.

Comments
ஹைலைட்ஸ்
  • டெண்டுல்கர் பெர்லின் சென்ற புகைப்படத்தை பகிர்ந்தார்
  • கங்குலி, சச்சின் டெண்டுல்கரை கிண்டல் செய்தார்
  • லாரஸ் விளையாட்டு விருதுகளுக்காக சச்சின் டெண்டுல்கர் பெர்லினில் உள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
“அது எப்படி அவுட் இல்லை?” - டெண்டுல்கருக்கு எதிரான முறையீடு குறித்து கேள்வி எழுப்பும் வார்னே!
“அது எப்படி அவுட் இல்லை?” - டெண்டுல்கருக்கு எதிரான முறையீடு குறித்து கேள்வி எழுப்பும் வார்னே!
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டெண்டுல்கர் தோனிக்கு அளித்த முக்கிய ஆலோசனை!
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டெண்டுல்கர் தோனிக்கு அளித்த முக்கிய ஆலோசனை!
“வெளியே செல்லாதீர்கள்... உலகக் கோப்பைக்கு இன்னும் நேரம் உள்ளது” - ரோஹித் ஷர்மா!
“வெளியே செல்லாதீர்கள்... உலகக் கோப்பைக்கு இன்னும் நேரம் உள்ளது” - ரோஹித் ஷர்மா!
“பிரதமர் மோடியோட என்ன டிஸ்கஸ் செய்தேன்னா...” - மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்
“பிரதமர் மோடியோட என்ன டிஸ்கஸ் செய்தேன்னா...” - மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்
கோலி, டெண்டுல்கர் உட்பட 40 விளையாட்டு வீரர்களுடன் வீடியோ மூலம் உரையாடிய மோடி!
கோலி, டெண்டுல்கர் உட்பட 40 விளையாட்டு வீரர்களுடன் வீடியோ மூலம் உரையாடிய மோடி!
Advertisement