'ஹால் ஆஃப் ஃபேம்' விருது - குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சச்சின்!

Updated: 20 July 2019 13:52 IST

46 வயதான சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

Sachin Tendulkar "Humbled" After Induction Into ICC Hall Of Fame
இந்திய கிரிக்கெட் வீரர்களில் 'ஹால் ஆஃப் ஃபேம்' விருது பெறும் 6வது நபர் சச்சின் டெண்டுல்கர். © NDTV

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக விளங்கிய சச்சின் டெண்டுல்கருக்கு ''ஹால் ஆஃப் ஃபேம்"  பெருமையை வழங்கி கெளரவித்துள்ளது ஐசிசி. இதற்காக சச்சின் தன்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளார். " 'ஹால் ஆஃப் ஃபேம்' விருதை பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நான் இந்த நிலையில் இருக்க பலரும் பங்களித்துள்ளனர். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் எல்லோரின் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக பெரிய நன்றி" என்று ட்விட் செய்தார் சச்சின். மேலும், வேகப்பந்துவீச்சாளர் ஆலன் டொனால்ட்டுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இவரோடு தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஆலன் டொனால்ட், மற்றும் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி வீராங்கனை கேத்ரின் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். அடுத்த தலைமுறைகளுக்கான கிரிக்கெட்டை கொண்டு சென்றவர்கள் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. "இந்த விளையாட்டுக்காக ஏதோ என்னால் முடிந்த ஒரு விஷயத்தை செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார் சச்சின் டெண்டுல்கர்.

46 வயதான சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 34357 ரன்களை ஒட்டுமொத்தமாக அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் குவித்துள்ளார். மொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை விளாசிய ஒரே வீரர் சச்சின் மட்டும்தான். 

ஐசிசி வெளியிட்டுள்ள வீடியோவில் மஹிலா ஜெயவர்த்தனே சச்சினின் சாதனையை பாராட்டி பேசியுள்ளார். 25 வருடங்களாக சிறந்த கிரிக்கெட்டை ஆடியுள்ளார் என்று தெரிவித்தார்.

இந்த பெருமையை பெற்ற சச்சின் தனது குடும்பம், பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தனது வாழ்க்கையில் தனது சகோதரர் அஜித் மற்றும் தனது மனைவி அஞ்சலி இருவரது பங்களிப்பு அளப்பறியது என்றார். மேலும் பயிற்சியாளர் அச்ரேக்கரையும் நினைவுகூர்ந்தார்.

சச்சின் இந்த பெருமையை பெற ஓய்வை பெற்ற போதே தகுதியானவர்தான். ஆனால் இந்த பெருமையை பெற ஓய்வு பெற்று குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆகியிருக்கவேண்டும் என்பதுதான். 

டெண்டுல்கர் 2013 நவம்பரில் ஓய்வை அறிவித்தார். 15921 டெஸ்ட் ரன்களையும், 18426 ஒருநாள் போட்டி ரன்களையும் குவித்துள்ளார். ஐசிசியின் ஹால் ஆஃப் பேம் விருது பெறும் ஆராவது இந்தியர் சச்சினாவார். 

52 வயதான டொனால்ட் 330 டெஸ்ட் விக்கெட்டுகளையும், 272 ஒருநாள் விக்கெட்டுகளையும் தன் வசம் வைத்துள்ளார். இவர் 2003ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் எதிலும் உலகத்தரம் இல்லை" - அப்துல் ரஸாக்
"பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் எதிலும் உலகத்தரம் இல்லை" - அப்துல் ரஸாக்
#OnthisDay சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நாள் இன்று!
#OnthisDay சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நாள் இன்று!
புதிய வகை சிலந்திக்கு சச்சின் டெண்டுல்கர் என்று பெயரிடப்பட்டுள்ளது!
புதிய வகை சிலந்திக்கு சச்சின் டெண்டுல்கர் என்று பெயரிடப்பட்டுள்ளது!
ஒருநாள் போட்டியில் "25 ஓவர்களில் 2 இன்னிங்ஸ்களில் மாற்றம் தேவை" - டெண்டுல்கர்
ஒருநாள் போட்டியில் "25 ஓவர்களில் 2 இன்னிங்ஸ்களில் மாற்றம் தேவை" - டெண்டுல்கர்
"பகல்-இரவு டெஸ்ட்டுக்கு சச்சினை அழைத்து வர முயற்சிப்பேன்" - சவுரவ் கங்குலி!
"பகல்-இரவு டெஸ்ட்டுக்கு சச்சினை அழைத்து வர முயற்சிப்பேன்" - சவுரவ் கங்குலி!
Advertisement