கிரிக்கெட் களத்தில் மீண்டும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாரா!

Updated: 16 October 2019 11:49 IST

உலகத் தொடர் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு இடையே ஆண்டுதோறும் நடைபெறும் டி20 போட்டியாகும்.

Sachin Tendulkar, Brian Lara Among Stars To Play T20 Tournament In India
முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் பேட்டிங் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா ஆகியோரும் இடம்பெறவுள்ளனர். © Twitter

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சாலை பாதுகாப்பு உலகத் தொடருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் பேட்டிங் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா ஆகியோரும் இடம்பெறவுள்ளனர். உலகத் தொடர் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு இடையே ஆண்டுதோறும் நடைபெறும் டி20 போட்டியாகும். பிப்ரவரி 2-16 முதல் இந்தியா முழுவதும் நடைபெறும் போட்டிகளுக்காக இந்தியாவின் வீரேந்தர் சேவாக், ஆஸ்திரேலிய பிரட் லீ, இலங்கை திலகரத்ன தில்ஷன் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ் உள்ளிட்ட முன்னாள் வீரர்களுடன் சச்சின் மற்றும் லாரா இணைவார்கள்.

46 வயதான டெண்டுல்கர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் உலகில் அதிக ரன்கள் பெற்றவர். 2013ல் முடிவடைந்த 24 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் 34,000 ரன்களையும் 100 சதங்களையும் குவித்துள்ளார்.

2008ம் ஆண்டில், சச்சின் அதிக டெஸ்ட் ரன்களுக்கான லாராவின் சாதனையை விஞ்சியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் இடது கை வீரர் லாரா 2007ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு விளையாட்டின் மிக நீண்ட வடிவத்தில் 11,953 ரன்களை பெற்றுள்ளார்.

லாரா 2004ம் ஆண்டில் ஆன்டிகுவாவில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
புஜாரா பிறந்தநாளுக்கு குஜராத்தியில் வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
புஜாரா பிறந்தநாளுக்கு குஜராத்தியில் வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
Rahul Dravid Birthday: டிராவிட்டின் சிறந்த ஒருநாள் போட்டியை நினைவுகூர்ந்தது பிசிசிஐ!
Rahul Dravid Birthday: டிராவிட்டின் சிறந்த ஒருநாள் போட்டியை நினைவுகூர்ந்தது பிசிசிஐ!
ரஹானேவின் "வடை பாவ்" சாப்பிடும் பதிவுக்கு சச்சின் டெண்டுல்கரின் உடனடி பதில்!
ரஹானேவின் "வடை பாவ்" சாப்பிடும் பதிவுக்கு சச்சின் டெண்டுல்கரின் உடனடி பதில்!
ரவி சாஸ்திரி முதல் ஹர்பஜன் சிங் வரை... இந்திய vs ஆஸி .தொடரில் கவனிக்க வேண்டிய வீரர்கள்!
ரவி சாஸ்திரி முதல் ஹர்பஜன் சிங் வரை... இந்திய vs ஆஸி .தொடரில் கவனிக்க வேண்டிய வீரர்கள்!
சச்சின் டெண்டுல்கர் தேடிவந்த ஹோட்டல் பணியாளர் இப்போது பதிலளித்துள்ளார்!
சச்சின் டெண்டுல்கர் தேடிவந்த ஹோட்டல் பணியாளர் இப்போது பதிலளித்துள்ளார்!
Advertisement