"பாடத்திட்டத்தில் விளையாட்டு கட்டாயமாக்கப்பட வேண்டும்" சச்சின் டெண்டுல்கர்!

Updated: 21 November 2018 11:26 IST

ஓட்டப்பந்தய வீராங்கனை ஹீமா தாஸை பாராட்டிய சச்சின் அவர் பலருக்கு இன்ஸ்ப்ரேஷனாக இருப்பதாக கூறினார்.

Sachin Tendulkar Bats For Inclusion Of Sports In School Curriculum
"விளையாட்டும், கல்வியும் ஒன்றாக வளரும் போது செழிப்பான எதிர்காலம் உருவாகும்" என்றார் சச்சின் டெண்டுல்கர் © File Photo/NDTV

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் விளையாட்டை வாழ்க்கையின் முக்கியமான விஷயமாக பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும், விளையாட்டை பள்ளி பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

டெல்லியில் நடைபெற்ற விழாவில் பேசும் போது "விளையாட்டும், கல்வியும் ஒன்றாக வளரும் போது செழிப்பான எதிர்காலம் உருவாகும்" என்றார். "விளையாட்டை கட்டாயம் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். விளையாட்டு நிறவேற்றுமை, பணம், பாலின வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. குழந்தைகளின் மேம்பாட்டுக்கு அவசியமானது" என்றார்.

45 வயதான சச்சின் டெண்டுல்கர் குழந்தைகளிடம் உரையாடும்போது "பயமில்லாமல் இருங்கள் ஆனால் கவனமாக இருங்கள். ஆசிரியர்கள் தான் உங்களின் சிறந்த வழிகாட்டி. சிறந்த தனிமனித ஒழுக்கம் தான் சிறந்த அணியை உருவாக்கும்" என்றார்.

ஓட்டப்பந்தய வீராங்கனை ஹீமா தாஸை பாராட்டிய சச்சின் அவர் பலருக்கு இன்ஸ்ப்ரேஷனாக இருப்பதாக கூறினார். பெண்களின் பங்களிப்பு என்று பார்க்கும் போது அவர்கள் நிறைய சாதித்துள்ளார்கள். ஹீமா தாஸ் இன்று புதிய உயரங்களை தொடுவது நாட்டுக்கே பெருமை என்றார்.

ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் மிகவும் அவசியமானது. அனைத்து பள்ளிகளும் அதில் கவனம் செலுத்த வேண்டும். சில பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு கழிப்பறை இல்லை என்ற விஷயமெல்லாம் வருத்தமளிக்கிறது. அவை கலையப்பட வேண்டும் என்றார்.

(With IANS inputs)

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
சச்சினின் டெஸ்ட் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து பவுலர்!
சச்சினின் டெஸ்ட் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து பவுலர்!
#On This Day
#On This Day 'காட் ஆஃப் கிரிக்கெட்' தன்னுடைய முதல் சதமடித்த நாள் இன்று!
ஹஷிம் ஆம்லாவின் ஓய்வுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
ஹஷிம் ஆம்லாவின் ஓய்வுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
"2003 உலகக் கோப்பையில் தோற்க வாக்கார் யூனிஸ்தான் காரணம்" - சோயிப்அக்தர்
"2003 உலகக் கோப்பையில் தோற்க வாக்கார் யூனிஸ்தான் காரணம்" - சோயிப்அக்தர்
கம்-பேக் டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்த ஸ்மித்...!
கம்-பேக் டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்த ஸ்மித்...!
Advertisement