Listen to the latest songs, only on JioSaavn.com
 

NZ vs IND: மூன்று வடிவங்களிலும் 100 போட்டிகள்...புதிய வரலாறு படைத்த ரோஸ் டெய்லர்!

Updated: 21 February 2020 15:37 IST

நியூசிலாந்து அணியின் அனுபவம் மிகுந்த வீரர் ரோஸ் டெய்லர், மூன்று வடிவங்களிலும் 100 சர்வதேச போட்டிகள் விளையாடிய முதல் கிரிக்க்கெட் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார்.

NZ vs IND: Ross Taylor Makes History With Unique 100-Caps Milestone
ரோஸ் டெய்லர் தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். © AFP

நியூசிலாந்து அணியின் அனுபவம் மிகுந்த வீரர் ரோஸ் டெய்லர், மூன்று வடிவங்களிலும் 100 சர்வதேச போட்டிகள் விளையாடிய முதல் கிரிக்க்கெட் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் நகரில் நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்டில் நியூசிலாந்து இந்தியாவை எதிர்கொண்ட போது, ரோஸ் டெய்லர் தனது 100வது டெஸ்ட் தோற்றத்தை அளித்தார். இந்தப் போட்டியின் போது தன் குழந்தைகளுடன் காணப்பட்டார். நியூசிலாந்து அணியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர். இந்த இரண்டு வடிவங்களிலும் 40 சதங்கள் குவித்துள்ளார்.

டெய்லரின் 100வது டெஸ்ட் போட்டியில்,  கைல் ஜேமீசன் வீராட் கோலிக்கு வீசிய பந்தை கேட்ச் பிடித்து மறக்க முடியாத போட்டியாக மாற்றிகொண்டார். டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஜேமீசன், முதல் நாள் காலை இந்திய அணியின் சேதேஸ்வர் புஜாராவை நீக்கினார்.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, வெலிங்டனில் அதிக காற்று, மேக மூட்டம் காரணமாக பவுலிங்கை தேர்வு செய்தது.

"மேலே சற்று மென்மையாக உள்ளது, ஆனால் அது பச்சை புல்லை அதிகமாக கொண்டுள்ளது, எனவே நாங்கள் பந்தில் தாக்கத்தை ஏற்படுத்துவோம்" என்று கேப்டன் கேன் வில்லியம்சன் கூறினார்.

டாஸ் தனது வழியில் வந்திருந்தால் அவரும் பந்து வீச நினைத்ததாக இந்திய கேப்டன் விராட் கோலி கூறினார்.

"நாள் முழுவதும் மேகமூட்டமாக இருக்கும். அதாவது, இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்ததை விட பிட்ச் இப்போது நன்றாக இருக்கிறது, நிறைய புல் அகற்றப்பட்டுள்ளது" என்று கோலி கூறினார்.

கடந்த மாதம் இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தனது 100வது டி20 விளையாடிய டெய்லர், நியூசிலாந்து அணிக்காக 231 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ரோஸ் டெய்லர் தனது 100வது டெஸ்ட்டை இந்தியாவுக்கு எதிராக ஆடினார்
  • அனைத்து வடிவங்களிலும் 100 சர்வதேச போட்டிகளில் விளையாடிய முதல் வீரர்
  • இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் 100வது டி20 விளையாடினார்
தொடர்புடைய கட்டுரைகள்
NZ vs IND: மூன்று வடிவங்களிலும் 100 போட்டிகள்...புதிய வரலாறு படைத்த ரோஸ் டெய்லர்!
NZ vs IND: மூன்று வடிவங்களிலும் 100 போட்டிகள்...புதிய வரலாறு படைத்த ரோஸ் டெய்லர்!
“சதம் அடிச்சதும் நாக்கை ஏன் வெளியே நீட்றீங்க?” - ரோஸ் டெய்லரை வம்பிழுத்த ஹர்பஜன்!
“சதம் அடிச்சதும் நாக்கை ஏன் வெளியே நீட்றீங்க?” - ரோஸ் டெய்லரை வம்பிழுத்த ஹர்பஜன்!
சிக்ஸரை தடுக்க சஞ்சு சாம்சனின் சிறப்பான ஃபீல்டிங்... வைரல் வீடியோ!
சிக்ஸரை தடுக்க சஞ்சு சாம்சனின் சிறப்பான ஃபீல்டிங்... வைரல் வீடியோ!
நியூசிலாந்து கிரிக்கெட் விருதுகள்: வில்லியம்சனுக்கு மூன்று விருதுகள்!
நியூசிலாந்து கிரிக்கெட் விருதுகள்: வில்லியம்சனுக்கு மூன்று விருதுகள்!
ஐசிசி தரவரிசை: மீண்டும் மூன்றாம் இடத்தில் நியூசிலாந்து!
ஐசிசி தரவரிசை: மீண்டும் மூன்றாம் இடத்தில் நியூசிலாந்து!
Advertisement