மனைவி, குழந்தையுடன் விடுமுறையை கொண்டாடும் ரோஹித் ஷர்மா!

Updated: 17 May 2019 17:09 IST

இந்திய டி20 லீக்கில் அதிக வெற்றிகள் பதித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் ரோஹித் ஷர்மா.

Rohit Sharma
கேப்டன் ரோஹித் ஷர்மா, மனைவி ரித்திகா மற்றும் மகள் சமைராவுடன் நேரத்தை செலவழித்து வருகிறார். © Twitter @ImRo45

2019ம் ஆண்டு ஐபிஎல்லில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்றுள்ளது. ரோஹித் ஷர்மா, மே 30ம் தேதி துவங்கவுள்ள உலகக் கோப்பையில் அணியிலும் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் முடிந்ததும் ரோஹித் ஷர்மா மாலத்தீவுகள் சென்ற புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த சில மாதங்களாக பிஸியாக இருந்த இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா, இப்போது மனைவி ரித்திகா மற்றும் மகள் சமைராவுடன் நேரத்தை செலவழித்து வருகிறார். "Partner in crime for life never as zen as I am here in this part of the world. Perfect gateway," என்று எழுதி ஒரு புகைப்படம் வெளியிட்டார்.

Kinda night you want after all the mayhem

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on

ஐபிஎல் இறுதிப்போட்டியில் லசித் மலிங்கா வீசியா கடைசி பந்து மும்பை அணியை நான்காவது முறையாக கோப்பையை வெல்ல உதவியாக இருந்தது. இந்திய டி20 லீக்கில் அதிக வெற்றிகள் பதித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் ரோஹித் ஷர்மா.

2013 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது மும்பை. பின்னர், 2017ம் ஆண்டு புனே அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது.

மே 30ம் தேதி தொடங்கவுள்ள உலகக் கோப்பை போட்டியில், துவக்க வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் சிறப்பாக செயல்படுவார்கள் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்திய அணி ஜூன் 5ம் தேதி தென்னாப்ரிக்காவை எதிர்கொள்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்றுள்ளது
  • உலகக் கோப்பையில் அணியிலும் ரோஹித் ஷர்மா இடம்பெற்றுள்ளார்
  • ஒருநாள் போட்டியில் 3 இரு சதங்கள் அடித்த ஒரே வீரர் ரோஹித் ஷர்மா தான்
தொடர்புடைய கட்டுரைகள்
"தொடக்க வீரர் வாய்ப்பு கொடுத்த கோலி, ரவி சாஸ்திரிக்கு நன்றி" - ரோஹிர் ஷர்மா
"தொடக்க வீரர் வாய்ப்பு கொடுத்த கோலி, ரவி சாஸ்திரிக்கு நன்றி" - ரோஹிர் ஷர்மா
மூன்றாவது டெஸ்ட்டை வென்று 3-0 என்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்றாவது டெஸ்ட்டை வென்று 3-0 என்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 3வது டெஸ்ட் மூன்றாவது நாள் #Scorecard
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 3வது டெஸ்ட் மூன்றாவது நாள் #Scorecard
3rd Test, Day 2: Rohit Sharma இரட்டை சதம்… பவுலர்கள் ஆட்டம் ஆரம்பம்!
3rd Test, Day 2: Rohit Sharma இரட்டை சதம்… பவுலர்கள் ஆட்டம் ஆரம்பம்!
Advertisement