ஹாமில்டன் டி20: "ஐ யம் வெயிட்டிங்" சொல்லும் ரோஹித் ஷர்மா

Updated: 09 February 2019 16:21 IST

"அழகான ஹாமில்டனை எதிர்நோக்கியுள்ளோம். இதற்காக தான் மூன்று மாதங்களாக காத்திருந்தோம்" என்று பதிவிட்டுள்ளார் ரோஹித் ஷர்மா.

Rohit Sharma "Looks Forward" To T20I Series Decider Against New Zealand. See Picture
2வது டி20 போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா உலக அளவில் டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். © Twitter

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டதால் ரோஹித் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். முதல் போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.

மூன்றாவது போட்டிக்கு ஹாமில்டன் வந்துள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா சமூக வலைதளத்தில் "அழகான ஹாமில்டனை எதிர்நோக்கியுள்ளோம். இதற்காக தான் மூன்று மாதங்களாக காத்திருந்தோம்" என்று பதிவிட்டுள்ளார். கடைசி போட்டியை வென்றால் நியூசிலாந்து மண்ணில் டி20 தொடரை வெல்லும் முதல் கேப்டன் என்ற பெருமையை ரோஹித் பெறுவார்.

2வது டி20 போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா உலக அளவில் டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்தப் போட்டியில் ரோஹித் 29 பந்தில் அரைசதமடித்தார்.

முன்னதாக டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆரம்பத்தில் தடுமாறினாலும் க்ராண்தோம் 50, டெய்லர் 42, வில்லியம்சன் 20 ரன்கள் குவிக்க 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் க்ருணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய இந்தியா, ரோஹித் ஷர்மாவின் அதிரடி அரைசதம், தவான் 30, பன்ட் 40 ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியது. நியூசிலாந்து தரப்பில் பெர்குசன், மிட்செல், சோதி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இது நியூசிலாந்து மண்ணில் இந்தியாவின் முதல் டி20 வெற்றியாகும். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Beautiful drive to Hamilton, look forward to one last game of what has been a gruelling 3 months

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on

இந்திய ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்ட்யாவும் "ஆக்லாந்து வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. ஹாமில்டன் வெற்றியை எதிர்நோக்கியுள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தொடரை நிர்னயிக்கும் கடைசி டி20 போட்டில் ஹாமில்டனில் நாளை நடைபெறுகிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • ரோஹித் ஷர்மா இப்போது இந்திய அணியை வழிநடத்துகிறார்
  • இரண்டாவது டி20 போட்டியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
  • இரண்டாது டி20 போட்டியில் ரோஹித் 29 பந்தில் அரைசதமடித்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
3வது ஒருநாள்: கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கு சொந்தமாக போகும் புது சாதனை?
3வது ஒருநாள்: கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கு சொந்தமாக போகும் புது சாதனை?
#Preview கடைசி ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா?
#Preview கடைசி ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா?
மேற்கிந்திய தீவுகள் வீரர்களுடன் தண்ணீரில் ஆட்டம் போடும் இந்திய வீரர்கள்!
மேற்கிந்திய தீவுகள் வீரர்களுடன் தண்ணீரில் ஆட்டம் போடும் இந்திய வீரர்கள்!
"விரக்தியடைந்த யாரோ தான் இதை செய்திருப்பார்கள்" - கோலி-ரோஹித் குறித்து கவாஸ்கர்!
"விரக்தியடைந்த யாரோ தான் இதை செய்திருப்பார்கள்" - கோலி-ரோஹித் குறித்து கவாஸ்கர்!
கோலி போல் நடித்து காட்டிய ஜடேஜா...கண்டுபிடித்த ரோகித்...பார்த்து ரசித்த கோலி...! #Viralvideo
கோலி போல் நடித்து காட்டிய ஜடேஜா...கண்டுபிடித்த ரோகித்...பார்த்து ரசித்த கோலி...! #Viralvideo
Advertisement