டி20 போட்டியில் அதிக சிக்ஸர்... ரோஹித் ஷர்மாவின் புதிய சாதனை!

Updated: 05 August 2019 17:08 IST

ரோஹித் ஷர்மா இப்போது 107 சிக்ஸர்களுடன் முன்னிலையில் இருக்கிறார். கெயில் 105 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Rohit Sharma Breaks Chris Gayle
ஞாயிறன்று நடந்த போட்டி மூலம் ரோஹித் ஷர்மா தன்னுடைய 17வது டி20 அரைசதத்தை நிறைவு செய்தார். © Twitter

டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரோஹித் ஷர்மா. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்தார். இதனால், கிறிஸ் கெயிலின் 105 சிக்ஸர்கள் என்ற எண்ணிக்கையை முந்தியுள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்பாக ரோஹித் ஷர்மாவுக்கு நான்கு சிக்ஸர்கள் தேவைப்பட்டது. தொடரில் முதல் போட்டியில் 24 ரன்கள் எடுத்தார். அதில் இரண்டு சிக்ஸர் அடித்தார். பின்னர் இரண்டாவது போட்டியில் 3 சிக்ஸர் அடித்ததால், ரோஹித் ஷர்மா இப்போது 107 சிக்ஸர்களுடன் முன்னிலையில் இருக்கிறார். மேற்கிந்திய தீவுகள் டி20 அணியில் கெயில் இடம்பெறவில்லை. இப்போது அவர் 105 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் உள்ளார். ஞாயிறன்று நடந்த போட்டி மூலம் ரோஹித் ஷர்மா தன்னுடைய 17வது டி20 அரைசதத்தை நிறைவு செய்தார்.

டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரோஹித் ஷர்மா. மேலும், டி20 போட்டியில் அதிக சதங்கள் (4) குவித்த வீரரும் ரோஹித் ஷர்மா தான்.

முதல் டி20 போட்டியில் இந்தியா மேற்கிந்திய தீவுகளை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ரோஹித் ஷர்மா, 5 சதங்கள் குவித்தார். 2015ம் ஆண்டு குமார் சங்ககராவின் சாதனையை முறியடித்துள்ளார் ரொஹித் ஷர்மா.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், துணை கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையே பிரச்னை என்று உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்திய அணி தோற்றதில் இருந்து வதந்திகள் பரவி வருகின்றன. 

 "இதை நான் நீண்ட காலமாக பார்த்து வருகிறேன். ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிவது சரியானதல்ல. அது மரியாதை குறைக்கும் நிகழ்வாக அமைந்து விடுகிறது. எனக்கும் ரோஹித்துக்கும் இடையில் ஒரு பிரச்னையும் இல்லை," என்று கோலி கூறியிருந்தார்.

இரு வீரர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு உள்ளது என்று சொல்பவர்களுக்கு மேலும் அது குறித்து பேசும் விதமாக ரோஹித் ஷர்மா ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

"நான்  என் அணிக்காக மட்டும் விளையாடவில்லை. நாட்டுக்காக விளையாடுகிறேன்," என்று ரோஹித் ஷர்மா ட்விட் செய்துள்ளார். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"தொடக்க வீரர் வாய்ப்பு கொடுத்த கோலி, ரவி சாஸ்திரிக்கு நன்றி" - ரோஹிர் ஷர்மா
"தொடக்க வீரர் வாய்ப்பு கொடுத்த கோலி, ரவி சாஸ்திரிக்கு நன்றி" - ரோஹிர் ஷர்மா
மூன்றாவது டெஸ்ட்டை வென்று 3-0 என்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்றாவது டெஸ்ட்டை வென்று 3-0 என்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 3வது டெஸ்ட் மூன்றாவது நாள் #Scorecard
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 3வது டெஸ்ட் மூன்றாவது நாள் #Scorecard
3rd Test, Day 2: Rohit Sharma இரட்டை சதம்… பவுலர்கள் ஆட்டம் ஆரம்பம்!
3rd Test, Day 2: Rohit Sharma இரட்டை சதம்… பவுலர்கள் ஆட்டம் ஆரம்பம்!
Advertisement