ரோஹித் ஷர்மா ஒரே நாளில் ஐந்து சாதனை!

Updated: 08 November 2018 12:58 IST

முதலில் 11 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலியிடமிருந்த டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை முறியடித்தார் ரோஹித் ஷர்மா.

India vs West Indies: Rohit Sharma Sets Record, Becomes First Batsman To Score Four T20I Centuries
இந்த போட்டியில் சிறப்பாக ஆடி சதமடித்த ரோஹித் ஷர்மா ஒரே போட்டியில் 5 சாதனைகளை புரிந்துள்ளார். © AFP

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற‌ இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா, தவான் ஜோடி மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை விளாசி தள்ளியது. 

இந்த போட்டியில் சிறப்பாக ஆடி சதமடித்த ரோஹித் ஷர்மா ஒரே போட்டியில் 5 சாதனைகளை புரிந்துள்ளார். முதலில் 11 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலியிடமிருந்த டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை முறியடித்தார்.

பின்னர் போட்டிக்கு முன் சர்வதேச அளவில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் இருந்த ரோஹித் 3 பேரின் ரன்களை அடுத்தத இடைவெளியில் கடந்து 98 ரன்களை எட்டிய போது அதிக ரன்குவித்த இரண்டாவது சர்வதேச வீரர் என்ற சாதனை படைத்தார். முதலிடத்தில் நியூஸிலாந்தின் மார்ட்டின் கப்தில் 2271 ரன்களுடன் முதலிடத்திலும், ரோஹித் ஷர்மா 2203 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். 

நேற்றைய போட்டியில் சதமடித்ததன் மூலம் டி20 வரலாற்றில் உலக அளவில் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். 

மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவரில் 124 ரன்களை மட்டுமே எடுத்ததால் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. மேலும் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய வென்றது. ரோஹித் ஷர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"ரோஹித் என்ன செய்யப் போகிறார் என்பதில் கவனம் செலுத்தாதீர்கள்" - விராட் கோலி!
"ரோஹித் என்ன செய்யப் போகிறார் என்பதில் கவனம் செலுத்தாதீர்கள்" - விராட் கோலி!
"மும்பை ஆரே காலணியில் மரங்களை வெட்டாதீர்கள்" - மனம் வருந்தும் ரோஹித் ஷர்மா
"மும்பை ஆரே காலணியில் மரங்களை வெட்டாதீர்கள்" - மனம் வருந்தும் ரோஹித் ஷர்மா
இந்திய vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட்: அதிக சிக்ஸர்கள் அடித்த டெஸ்ட் போட்டி
இந்திய vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட்: அதிக சிக்ஸர்கள் அடித்த டெஸ்ட் போட்டி
முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: களத்தில் கோலியாக மாறிய ரோஹித் ஷர்மா!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: களத்தில் கோலியாக மாறிய ரோஹித் ஷர்மா!
Advertisement