அதிவேகமாக 8000 ரன்களை கடந்த 3வது வீரர் ரோஹித் ஷர்மா!

Updated: 14 March 2019 13:03 IST

உலக அளவில் அதிவேகமாக 8000 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன் கோலி 175 இன்னிங்ஸிலும், ஏபி டிவில்லியர்ஸ் 182 இன்னிங்ஸிலும் இந்த இலக்கை கடந்தனர்.

Rohit Sharma Equals Sourav Ganguly
உலக அளவில் அதிவேகமாக 8000 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார் ரோஹித் ஷர்மா. © BCCI/Twitter

இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் 8000 ரன்களை கடந்து இந்திய முன்னாள் கேப்டன் கங்குலியின் சாதனையை சமன் செய்தார். மேலும், உலக அளவில் அதிவேகமாக 8000 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன் கோலி 175 இன்னிங்ஸிலும், ஏபி டிவில்லியர்ஸ் 182 இன்னிங்ஸிலும் இந்த இலக்கை கடந்தனர். இதனை ரோஹித் 200 இன்னிங்ஸில் கடந்து கங்குலியின் சாதனையை சமன் செய்தார்.

நேற்றைய போட்டியில் 273 என்ற இலக்கை துரத்திய இந்திய அணியில் ரோஹித் மட்டும் சிறப்பாக ஆடி தனது 41வது அரைசதத்தை கடந்தார். 31 வயதான ரோஹித் 22 சதங்களுடன் 47.64 சராசரியுடன் 8000 ரன்களை கடந்துள்ளார்.

ரோஹித்தின் இந்த சாதனையை பாராட்டி பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது.

முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா, அபாரமாக ஆட்டத்தை துவங்கியது. முதல் விக்கெட்டுக்கு பின்ச்-கவாஜா இணை 75 ரன்களையும், இரண்டாவது விக்கெட்டுக்கு கவாஜா-ஹேண்ட்ஸ்கோம்ப் இணை 99 ரன்களையும் குவித்தது. பின்னர் யாரும் அந்த வேகத்தை சரியாக முன்னெடுக்காததால் 300 ரன்களை கடக்க முடியாமல் போனது. 

50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கவாஜா 100 ரன்களையும், ஹேண்ட்ஸ்கோம்ப் 52 ரன்களையும் குவித்தனர். இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், ஷமி, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர், 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் வழக்கம் போல் சொதப்பினர். கோலி 20, த்வான் 12, ஷங்கர், பன்ட் தலா 16, ஜடேஜா டக் என சொற்ப ரன்களில் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தர்.  இந்திய வீரர்களில் ரோஹித் 56, புவனேஷ்வர் குமார் 46, ஜாதவ் 44 என ஓரளவுக்கு சிறப்பாக ஆடினர். எனினும் இந்திய அணி 237 ரன்களுக்கு ஆட்டமிழந்த‌து.இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.ஆஸ்திரேலிய தரப்பில் ஸம்பா 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் ரிச்சர்ட்ஸன்,ஸ்டோனின்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், லயன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது ஆஸ்திரேலியா. இந்த தொடரில் இந்தியா முதல் இரண்டு போட்டிகளையும், ஆஸ்திரேலியா அடுத்த மூன்று போட்டிகளையும் வென்று 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது. உலகக் கோப்பைக்கு முன்பு இந்தியா ஆடும் கடைசி தொடர் இது. இதில் பல பரிசோதனை முயற்சிகளை செய்து கைகொடுக்காததால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. மேலும் தோனிக்கு கடைசி இரண்டு போட்டிகளுக்கு ஓய்வளித்ததும் தவறு என விமர்சிக்கப்படுகிற‌து.

Comments
ஹைலைட்ஸ்
  • 5வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது
  • இந்தத் தொடரில் கவாஜா தன்னுடைய இரண்டாவது சதத்தை நிறைவு செய்தார்
  • உலக அளவில் அதிவேகமாக 8000 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் ரோஹித்
தொடர்புடைய கட்டுரைகள்
29வது பிறந்தநாளை கொண்டாடும் சஹாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து மழை!
29வது பிறந்தநாளை கொண்டாடும் சஹாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து மழை!
ஐ.சி.சி.-யின் டாப் 5 பேட்ஸ்மேன் – முதலிடத்தில் ரோஹித் சர்மா!!
ஐ.சி.சி.-யின் டாப் 5 பேட்ஸ்மேன் – முதலிடத்தில் ரோஹித் சர்மா!!
ஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை ஆடும் XI அணி... வாய்ப்பை தவறவிட்ட விராட் கோலி!
ஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை ஆடும் XI அணி... வாய்ப்பை தவறவிட்ட விராட் கோலி!
"ஐசிசி விதிகள் கேலிக்குரியது" - நியூசிலாந்து தோல்விக்கு பின் கவுதம் கம்பீர்
"ஐசிசி விதிகள் கேலிக்குரியது" - நியூசிலாந்து தோல்விக்கு பின் கவுதம் கம்பீர்
ரோஹித் - கோலி மோதல் : இரட்டை தலைமைக்கான வாய்ப்பை யோசிக்கும் பிசிசிஐ
ரோஹித் - கோலி மோதல் : இரட்டை தலைமைக்கான வாய்ப்பை யோசிக்கும் பிசிசிஐ
Advertisement