டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்து ரோஹித் ஷர்மா உலக சாதனை!

Updated: 08 February 2019 18:10 IST

டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையை 2288 ரன்களுடன் ரோஹித் ஷர்மா பெற்றார். இதற்கு முன் கப்தில் 2272 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்

Rohit Sharma Becomes Leading T20I Run-Scorer With Record Breaking Knock
ரோஹித் ஷர்மா, இன்றைய போட்டியில் டி20 போட்டிகளில் தன்னுடைய 100வது சிக்சரை விளாசினார். © Twitter

நியூசிலாந்துடனான 2வது டி20 போட்டியில் ரோஹித் ஷர்மா உலக சாதனையை படைத்தார். 35 ரன்கள் எடுத்த நிலையில் சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையை 2288 ரன்களுடன் ரோஹித் ஷர்மா பெற்றார். இதற்கு முன் கப்தில் 2272 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். அவரது சாதனையை தற்போது ரோஹித் முறியடித்துள்ளார். அதுமட்டுமின்றி டி20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை 20 அரைசதங்களுடன் பெற்றார். முன்னதாக இந்திய கேப்டன் கோலி 19 அரைசதங்களுடன் முதலிடத்தில் இருந்தார். 

இன்றைய போட்டியில் அவரது டி20 போட்டிகளில் 100வது சிக்சரை விளாசினார். இதேபோல் சர்வதேச அளவில் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் தான் 100 சிக்ஸருக்கு மேல் அடித்துள்ளனர். முதலிடத்தில் கப்தில் மற்றும் கெயில் 103 சிக்ஸர்களுடனும் முதலிடத்தில் உள்ளனர். ரோஹித் 102 சிக்சர்களுடன் 2வது இடத்தில் உள்ளார். 

அதேபோல சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலிலும் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 349 சிக்சர் அடித்துள்ள ரோஹித்துக்கு முன்னால் கெயில், அப்ரிதி 476, மெக்குலம் 398, ஜெயசூர்யா 352 சிக்சர்களுடன் உள்ளனர். 

தொடரை 1-1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்துள்ளது. கடைசி போட்டியை வென்றால் நியூசிலாந்தில் டி20 தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோஹித் பெறுவார். முன்னதாக 2008ல் தோனி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து 0-2 என்ற கணக்கில் தோற்றது. 

Comments
ஹைலைட்ஸ்
  • சர்வதேச அளவில் இரண்டு வீரர்கள் தான் 100 சிக்ஸருக்கு மேல் அடித்துள்ளனர்
  • இதற்கு முன் கப்தில் 2272 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்
  • முன்னதாக இந்திய கேப்டன் கோலி 19 அரைசதங்களுடன் முதலிடத்தில் இருந்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
"ரோஹித் என்ன செய்யப் போகிறார் என்பதில் கவனம் செலுத்தாதீர்கள்" - விராட் கோலி!
"ரோஹித் என்ன செய்யப் போகிறார் என்பதில் கவனம் செலுத்தாதீர்கள்" - விராட் கோலி!
"மும்பை ஆரே காலணியில் மரங்களை வெட்டாதீர்கள்" - மனம் வருந்தும் ரோஹித் ஷர்மா
"மும்பை ஆரே காலணியில் மரங்களை வெட்டாதீர்கள்" - மனம் வருந்தும் ரோஹித் ஷர்மா
இந்திய vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட்: அதிக சிக்ஸர்கள் அடித்த டெஸ்ட் போட்டி
இந்திய vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட்: அதிக சிக்ஸர்கள் அடித்த டெஸ்ட் போட்டி
முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: களத்தில் கோலியாக மாறிய ரோஹித் ஷர்மா!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: களத்தில் கோலியாக மாறிய ரோஹித் ஷர்மா!
Advertisement