"ரோஹித் ஷர்மா உலகத் தரம் வாய்ந்த வீரர்" - புகழும் ஆடம் கில்கிறிஸ்ட்!

Updated: 12 September 2019 18:32 IST

"சொந்த மண்ணில் ரோஹித் கட்டாயமாக தொடக்க வீரராக களமிறங்கலாம்" என்றார் ஆடம் கில்கிறிஸ்ட்.

Adam Gilchrist Backs Rohit Sharma For Opening Role In Tests
ரோஹித் ஷர்மா கடைசியாக 2018ம் ஆண்டு மெல்பர்னில் நடந்த டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றார். © AFP

உலகக் கோப்பையில் சிறப்பாக ஆடிய ரோஹித் ஷர்மா, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அணியில் இடம்பெற்றார். ஆனால், இரண்டு டெஸ்ட் தொடரிலும் அவர் ஆடும் லெவனில் இணைக்கப்படவில்லை. இந்தியாவின் தொடக்க ஜோடி கே.எல்.ராகுல் மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோர் அணிக்கு ஒரு நல்ல தொடக்கத்தை வழங்கத் தவறிவிட்டனர். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே எல் ராகுல் தன்னை நிரூபிக்கத் தவறியதால், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ஆடம் கில்கிறிஸ்ட், ரோஹித் ஷர்மா டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராக ஆடலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் கில்கிறிஸ்ட் கூறுகையில், ரோஹித் பின்வாங்கப்படுவது போல் தெரிகிறது. ஆனால் அவர் தனது விளையாட்டில் தொடர மிகவும் கடினமாக உழைக்கிறார்.

"ரோஹித் மக்களை ஏமாற்றுகிறார் என்று நினைக்கிறேன். அதாவது, அவர் பின்வாங்கும் (வகையான) நபர் என்பதால், அவர் போதுமான அளவு உழைக்கவில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள். உண்மையில், அவர் உலகத் தரம் வாய்ந்தவர்" என்று கில்கிறிஸ்ட் கூறினார்.

மேலும் அவர், வெளிநாட்டு சூழ்நிலைகளில் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்போது ரோஹித் அதை மிகவும் சவாலாக நினைக்கிறார்.

"சொந்த மண்ணில் ரோஹித் கட்டாயமாக தொடக்க வீரராக களமிறங்கலாம்" என்றார்.

"ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்வது அவருக்கு கடினமாக இருக்கலாம்." என்றார்.

"நான் ரோஹித்தை நேசிக்கிறேன், ஐபிஎல்லில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக நாங்கள் ஒன்றாக விளையாடியுள்ளோம்" என்று 47 வயதான அவர் கூறினார்.

கரீபியன் தீவுகளில் நான்கு இன்னிங்ஸ்களில் ராகுல் 44, 38, 13 மற்றும் 6 ரன்கள் குவித்தார். டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், 50க்கும் அதிகமான ரன்கள் குவித்தார்.

முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் டெஸ்ட் தொடக்க வீரர் ரோஹித்துக்கு ஆதரவளித்துள்ளார். மேலும் நட்சத்திர பேட்ஸ்மேன் அதிக ஓவர்கள் கொண்ட போட்டியில் ஆட ஒரு வாய்ப்பைப் பெற தகுதியானவர் என்றும் கூறினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"ரோஹித் என்ன செய்யப் போகிறார் என்பதில் கவனம் செலுத்தாதீர்கள்" - விராட் கோலி!
"ரோஹித் என்ன செய்யப் போகிறார் என்பதில் கவனம் செலுத்தாதீர்கள்" - விராட் கோலி!
"மும்பை ஆரே காலணியில் மரங்களை வெட்டாதீர்கள்" - மனம் வருந்தும் ரோஹித் ஷர்மா
"மும்பை ஆரே காலணியில் மரங்களை வெட்டாதீர்கள்" - மனம் வருந்தும் ரோஹித் ஷர்மா
இந்திய vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட்: அதிக சிக்ஸர்கள் அடித்த டெஸ்ட் போட்டி
இந்திய vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட்: அதிக சிக்ஸர்கள் அடித்த டெஸ்ட் போட்டி
முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: களத்தில் கோலியாக மாறிய ரோஹித் ஷர்மா!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: களத்தில் கோலியாக மாறிய ரோஹித் ஷர்மா!
Advertisement