"பன்ட் இப்படி விளையாடினால், அதற்கான எதிர்வினையை சந்திப்பார்" - ரவி சாஸ்திரி!

Updated: 16 September 2019 12:03 IST

பன்ட் மிகவும் திறமை கொண்டவர், ஆனால் அவர் ஷாட்-தேர்வு மற்றும் முடிவெடுப்பதை வரிசைப்படுத்த முடிந்தால், அவரை தடுத்து நிறுத்த முடியாது என்று சாஸ்திரி கூறினார்.

Rishabh Pant Will Be "Rapped On The Knuckles" If He Keeps Playing Rash Shots, Says Ravi Shastri
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் அவர் தன்னை நிரூபிக்க தவறினார் பன்ட். © AFP

எம் எஸ் தோனியின் இடத்தை அனைத்து வடிவங்களிலும் நிரப்ப இளம் வீரர் ரிஷப் பன்ட் பணிக்கப்பட்டுள்ளார், குறிப்பாக அதில் சிறந்து விளங்க பயிற்சியளிக்கப்பட்டு வருகிறார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் அவர் தன்னை நிரூபிக்க தவறினார். மேலும், மோசமான பந்து தேர்வுக்கு விமர்சிக்கப்பட்டார். இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இதே போன்று பந்து தேர்வு செய்தால் அவர் தொடந்து விமர்சிக்கப்படுவார் என்றார். இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பன்ட் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஒரு ரன் கூட எடுக்காமல், அவுட் ஆனார்.

"இப்போது நாங்கள் அவரை விட்டுவிட்டோம், இதேபோன்று இன்னொரு முறை பந்து தேர்வு செய்தார், முதல் பந்தில் ஆட்டமிழந்தால் அவருக்கு எடுத்து சொல்லப்படும். திறமை இருக்கிறதோ இல்லையோ, அவரின் ஆட்டத்துக்கு எதிர்வினை இருக்கும்," என்றார்.

"ரொம்ப எளிது. நீங்கள் அணியை தாழ்த்துவதால், நீங்கள் தாழ்ந்து போவதை மறந்து போகிறீர்கள். மறுமுனையில் கேப்டன் இருக்கும்போது, அந்த நேரத்தில் தேவையானது விவேகமான ஒரு ஆட்டம்," என்றார் சாஸ்திரி.

பன்ட் மிகவும் திறமை கொண்டவர், ஆனால் அவர் ஷாட்-தேர்வு மற்றும் முடிவெடுப்பதை வரிசைப்படுத்த முடிந்தால், அவரை தடுத்து நிறுத்த முடியாது என்று சாஸ்திரி கூறினார்.

"அவரது நடையை மாற்றுவது பற்றி யாரும் யோசிக்க மாட்டார்கள். விராட் சொன்னது போல, நிலைமையைப் படிப்பது, போட்டி-விழிப்புணர்வு மற்றும் ஷாட்-தேர்வு ஆகியவை முக்கியமானவை. அவர் அதை புரிந்து கொள்ள முடிந்தால், அவரை தடுத்து நிறுத்த முடியாது"

"இது மாற ஒரு போட்டி ஆகலாம், நான்கு போட்டிகள் ஆகலாம். அவர் நிறைய ஐபிஎல் போட்டிகள் ஆடியுள்ளார். அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய நேரமிது," விராட் கோலியுடன் இருந்த ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
சாஹாவின் சிறப்பான விக்கெட் கீப்பிங்... பன்ட்டை காலாய்த்த ரசிகர்கள்!
சாஹாவின் சிறப்பான விக்கெட் கீப்பிங்... பன்ட்டை காலாய்த்த ரசிகர்கள்!
"நான் இங்கு தபேலா வாசிக்கவா இருக்கேன்?" - பன்ட் பிரச்னை குறித்து ரவி சாஸ்திரி!
"நான் இங்கு தபேலா வாசிக்கவா இருக்கேன்?" - பன்ட் பிரச்னை குறித்து ரவி சாஸ்திரி!
பன்ட்டை ஆதரித்த யுவராஜ் சிங்... அவருக்கு பதிலளித்த ஆஸி. வீரர் டீன் ஜோன்ஸ்
பன்ட்டை ஆதரித்த யுவராஜ் சிங்... அவருக்கு பதிலளித்த ஆஸி. வீரர் டீன் ஜோன்ஸ்
"ரிஷப் பன்ட் குறித்து மீடியாவில் கருத்து சொல்வதை நிறுத்துங்கள்" - யுவராஜ் சிங்!
"ரிஷப் பன்ட் குறித்து மீடியாவில் கருத்து சொல்வதை நிறுத்துங்கள்" - யுவராஜ் சிங்!
"4வது இடத்தில் யார் ஆட வேண்டும்?" - அமிதாப் பச்சனைப் போல் கேட்ட கவாஸ்கர்!
"4வது இடத்தில் யார் ஆட வேண்டும்?" - அமிதாப் பச்சனைப் போல் கேட்ட கவாஸ்கர்!
Advertisement