"உலகக் கோப்பை தொடருக்கு ஏன் ரிஷப் பன்ட் தேவை" - ஆஷிஷ் நெஹ்ரா விளக்கம்!

Updated: 15 February 2019 15:11 IST

"2019ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான அணிக்கு ரிஷப் பன்ட் தகுதியானவர்" என்று இந்திய முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

World Cup 2019: Rishabh Pant Should Be In India
"ரிஷப் பன்ட்டிடம் சிக்ஸர் அடிக்கும் திறன் உள்ளது அவரால் அநாயசமாக சிக்சர் அடிக்க முடியும்" என்று புகழ்ந்துள்ளார் ஆஷிஷ் நெஹ்ரா. © AFP

"2019ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான அணிக்கு ரிஷப் பன்ட் தகுதியானவர்" என்று இந்திய முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். ரிஷப் பன்ட் ஆடும் லெவனில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று கூறிய நெஹ்ரா, உலகக் கோப்பைக்கு ரிஷப் பன்ட் எவ்வளவு முக்கியமானவர் என்பதற்கு மூன்று முக்கியமான காரணங்களை முன்வைக்கிறார். 

முதலாவதாக, ஷிகர் தவானை விட்டால் டாப் 7 வீரர்களில் ஒருவர் கூட இடதுகை வீரர் கிடையாது. அதனை சமன் செய்ய ரிஷப் பன்ட் சரியான நபர். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பயணத்தில் சதமடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.

இரண்டாவதாக, ரிஷப் பன்ட் 1 முதல் 7 வரை எந்த நிலையிலும் ஆடும் திறன் படைத்தவர். இப்படிப்பட்ட ஒருவர் தான் கோலி தலைமையிலான அணிக்கு தேவை.

மூன்றாவதாக, ரிஷப் பன்ட்டிடம் சிக்ஸர் அடிக்கும் திறன் உள்ளது அவரால் அநாயசமாக சிக்சர் அடிக்க முடியும். ரோஹித் ஷர்மாவுக்கு பிறகு இப்படி சிக்ஸர் அடிக்கும் ஒருவர் அணிக்கு கட்டாயம் தேவை. 

பாரபட்சமின்றி எதிரணியை சிதைக்கும் திறன் பன்ட்டிடம் உள்ளது. இந்திய அணிக்கான உலகக் கோப்பை நட்சத்திர வீரர்களில் கோலி, ரோஹித், பும்ராவுக்கு பிறகு நான்காவது இடம் பன்ட்டுக்குதான் என்று கூறினார். 

ரிஷப் பன்ட்டை மூன்றாவது துவக்க வீரராக அணுகினால் தினேஷ் கார்த்திக்கை நடுவரிசை வீரராக ஆட வைக்கலாம் என்றார். 

"இதில் யோசிக்காமல் எடுக்கும் முடிவு இந்தியாவின் கீப்பர் தோனி என்பது மட்டும் தான்" என்று தோனியை புகழ்ந்தார். 

Comments
ஹைலைட்ஸ்
  • கிரிக்கெட் உலகக் கோப்பை வரும் மே மாதம் துவங்குகிறது
  • ரிஷப் பன் ட்டின் திறமையை ஆஷிஷ் நெஹ்ரா புகழ்ந்துள்ளார்
  • தோனி தலைமையிலான இந்திய அணி 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது
தொடர்புடைய கட்டுரைகள்
பன்ட்டை விமர்சித்த கெவின் பீட்டர்சன்... பதிலளித்த யுவராஜ் சிங்!
பன்ட்டை விமர்சித்த கெவின் பீட்டர்சன்... பதிலளித்த யுவராஜ் சிங்!
“இந்திய பேட்டிங்கில் 4வது இடம் இவருக்குத்தான்”- யுவராஜ் சொல்லும் வீரர் யார் தெரியுமா?
“இந்திய பேட்டிங்கில் 4வது இடம் இவருக்குத்தான்”- யுவராஜ் சொல்லும் வீரர் யார் தெரியுமா?
“பாண்டியாவுக்கு முன்னர் பன்ட் இறங்கியது ஏன் தெரியுமா?”- ரோகித் சொல்லும் காரணம்!
“பாண்டியாவுக்கு முன்னர் பன்ட் இறங்கியது ஏன் தெரியுமா?”- ரோகித் சொல்லும் காரணம்!
“உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படாததால்…”- மனம் திறந்த ரிஷப் பன்ட்!
“உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படாததால்…”- மனம் திறந்த ரிஷப் பன்ட்!
"தவானுக்கு ரிஷப் பன்ட் சிறந்த மாற்றாக இருப்பார்" - கெவின் பீட்டர்சன்
"தவானுக்கு ரிஷப் பன்ட் சிறந்த மாற்றாக இருப்பார்" - கெவின் பீட்டர்சன்
Advertisement