ஐசிசியின் வளர்ந்துவரும் சர்வதேச வீரர் ரிஷப் பன்ட்! #ICCAwards

Updated: 22 January 2019 20:58 IST

71 ஆண்டுகள் வரலாற்று வெற்றியில் ரிஷப் பன்ட் 350 ரன்குவித்தார்

Rishabh Pant Named ICC Emerging Player Of The Year After Impressive Australia Tour
சிட்னியில் சதமடித்து, ஆஸி மண்ணில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார் ரிஷப் பன்ட். © AFP

இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் ஐசிசியால் சிறந்த வளர்ந்து வரும் இளம் சர்வதேச வீரருக்கான விருதை பெற்றுள்ளார். இதற்கு முக்கிய காரணம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அவரது செயல்பாடுதான்.

71 ஆண்டுகள் வரலாற்று வெற்றியில் பன்ட் 350 ரன்குவித்தார். சிட்னியில் சதமடித்து ஆஸி மண்ணில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும், அடிலெய்ட் டெஸ்ட்டில் 11 கேட்ச் பிடித்து உலக சாதனையையும் செய்தார்.

இடதுகை கீப்பர் பேட்ஸ்மேனான பன்ட் 2018ல் மட்டும் சதம் மற்றும் 2 அரைசதத்துடன் 537 ரன்கள் குவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 40 கேட்ச் மற்றும் 2 ஸ்டெம்பிங்களையும், ஒருநாள் போட்டியில் 3 மற்றும் டி20 போட்டியில் 2 கேட்ச்களையும் பிடித்துள்ளார்.

2018ம் ஆண்டுக்கான டெஸ்ட் அணியில் இந்திய தரப்பில் கேப்டனாக இந்திய கேப்டன் விராட் கோலியும், கீப்பராக இந்திய கீப்பர் ரிஷப் பன்ட், வேகப்பந்து வீச்சாளர் பும்ராஹ் ஆகிய மூவரும் இடம் பெற்றுள்ளனர்.

ஒருநாள் போட்டி அணியில் ரோஹித்,கோலி,பும்ராஹ், குல்தீப் என இந்திய வீரர்கள் 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.

நம்பர் 1 பேட்ஸ்மேனாகவும், டெஸ்ட்டில் நம்பர் 1 அணியை வழிநடத்துவதால் இரண்டுக்கும் கோலியே கேப்டனாக்கப்பட்டுள்ளார். அதோடு ஐசிசி சிறந்த வீரருக்கான கேரி சோபர்ஸ் விருதையும் கோலி வென்றுள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • பன்ட், 2018ல் சதம் மற்றும் 2 அரைசதத்துடன் 537 ரன்கள் குவித்துள்ளார்
  • டெஸ்ட் போட்டிகளில் 40 கேட்ச் மற்றும் 2 ஸ்டெம்பிங்களையும் பிடித்துள்ளார்
  • அடிலெய்ட் டெஸ்ட்டில் 11 கேட்ச் பிடித்து உலக சாதனையும் செய்தார் பன்ட்
தொடர்புடைய கட்டுரைகள்
ரிஷப் பன்ட்டை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விராட் கோலி!
ரிஷப் பன்ட்டை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விராட் கோலி!
சையத் முஷ்டாக் அலி டிராஃபியில் இணைந்தார் பன்ட்... இந்திய அணியில் கே.எஸ்.பரத்!
சையத் முஷ்டாக் அலி டிராஃபியில் இணைந்தார் பன்ட்... இந்திய அணியில் கே.எஸ்.பரத்!
"பன்ட்டை விட சிறப்பாக விளையாடுகிறீர்கள்" - இடது கை பேட்டிங் செய்த அஸ்வின்!
"பன்ட்டை விட சிறப்பாக விளையாடுகிறீர்கள்" - இடது கை பேட்டிங் செய்த அஸ்வின்!
"பன்ட்டுக்கு, ஸ்டம்புக்கு பின்னால் தெளிவும் நேர்த்தியும் தேவை" குமார் சங்கக்காரா
"பன்ட்டுக்கு, ஸ்டம்புக்கு பின்னால் தெளிவும் நேர்த்தியும் தேவை" குமார் சங்கக்காரா
ரிஷப் பன்ட்டின் விக்கெட் கீப்பிங்கை விமர்சித்து ரசிகர்கள் பதிவிட்ட மீம்ஸ்!
ரிஷப் பன்ட்டின் விக்கெட் கீப்பிங்கை விமர்சித்து ரசிகர்கள் பதிவிட்ட மீம்ஸ்!
Advertisement