பன்ட்டை ஆதரித்த யுவராஜ் சிங்... அவருக்கு பதிலளித்த ஆஸி. வீரர் டீன் ஜோன்ஸ்

Updated: 25 September 2019 16:57 IST

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ், யுவராஜ் சிங் சொன்னதை ஏற்றுகொள்ளாமல், ட்விட்டரில் அவருக்கு பதிலளித்துள்ளார்.

No Sympathy For Rishabh Pant, Dean Jones Counters Yuvraj Singh, Says "It
பன்ட் தனது கடைசி ஆறு சர்வதேச போட்டிகளில் அனைத்து வடிவங்களிலும் 30 ரன்களுக்கு மேல் எடுக்க தவறிவிட்டார். © AFP

ரிஷப் பன்ட் பேட்டை கொண்டு சிறப்பாக செயல்படாதது ரசிகர்கள், கிரிக்கெட் பண்டிட்ஸ் மற்றும் இந்திய அணி நிர்வாகத்தினரிடையே கவலைக்குரிய ஒரு முக்கிய விஷயமாக உள்ளது. முன்னாள் இந்திய ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், ரிஷப் பன்ட்டுக்கு ஆதரவு தெரிவித்து, கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களின் கண்காணிப்பு தேவைப்படுகிறது என்றார். இருப்பினும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ், யுவராஜ் சிங் சொன்னதை ஏற்றுகொள்ளாமல், ட்விட்டரில் அவருக்கு பதிலளித்துள்ளார். "தவறுகளைச் செய்த வேறு எந்த இளம் வீரருக்கும் இல்லாமல், பன்ட் ஏன் வித்தியாசமாக இருக்க வேண்டும்?இது பெரியவர்கள் கிரிக்கெட். அவர் இளம் வீரர் என்று எனக்கும் தெரியும். ஆனால், அவர் உண்மை ஏற்றுக்கொண்டு கற்றுக்கொள்ள வேண்டும்," என்று டீன் ஜோன்ஸ் ட்விட் செய்துள்ளார்.

sg6a6bao

"ரிஷப் பன்ட்டுக்கு ஏற்றதுபோல்அவருக்கு யாராவது பயிற்சியளிக்க வேண்டும். ரிஷப் பன்ட்டை அடக்குவது மூலம், அவரிடமிருந்து சிறந்த விஷயங்களை பெற முடியாது. அவருக்கு நிறைய திறமையுள்ளது, பயிற்சியாளர் மற்றும் கேப்டன் அவரை வழிநடத்த வேண்டும். அணியினர் அவரை குறித்து மீடியாக்களில் கருத்து கூறுவதை நிறுத்த வேண்டும்," என்றார் யுவராஜ் சிங்.

உலகக் கோப்பையின் போது ஆல் ரவுண்டர் விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால், ரிஷப் பன்ட் அணியின் சேர்க்கப்பட்டார்.

உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய அணி ரிஷப் பன்ட்டை நான்காவது இடத்தில் தொடர செய்தது. ஆனால் அவர் அணி நிர்வாகம் அவர் மீது காட்டிய நம்பிக்கையை திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டார்.

21 வயதான விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தனது கடைசி ஆறு சர்வதேச போட்டிகளில் அனைத்து வடிவங்களிலும் 30 ரன்களுக்கு மேல் எடுக்க தவறிவிட்டார்.

தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தூர் போன்றவர்களிடமிருந்து அதிகம் பேசப்பட்ட நம்பர் 4 நிலையில் ரிஷப் பன்ட்டின் மோசமான ஃபார்ம் குறித்து ஊடகங்களில் சில வலுவான அறிக்கைகள் வந்துள்ளன.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"பன்ட்டை விட சிறப்பாக விளையாடுகிறீர்கள்" - இடது கை பேட்டிங் செய்த அஸ்வின்!
"பன்ட்டை விட சிறப்பாக விளையாடுகிறீர்கள்" - இடது கை பேட்டிங் செய்த அஸ்வின்!
"பன்ட்டுக்கு, ஸ்டம்புக்கு பின்னால் தெளிவும் நேர்த்தியும் தேவை" குமார் சங்கக்காரா
"பன்ட்டுக்கு, ஸ்டம்புக்கு பின்னால் தெளிவும் நேர்த்தியும் தேவை" குமார் சங்கக்காரா
ரிஷப் பன்ட்டின் விக்கெட் கீப்பிங்கை விமர்சித்து ரசிகர்கள் பதிவிட்ட மீம்ஸ்!
ரிஷப் பன்ட்டின் விக்கெட் கீப்பிங்கை விமர்சித்து ரசிகர்கள் பதிவிட்ட மீம்ஸ்!
ரிஷப் பன்ட்டுக்கு மோசமான நாளாக மாறிய பங்களாதேஷுக்கு எதிரான முதல் டி20!
ரிஷப் பன்ட்டுக்கு மோசமான நாளாக மாறிய பங்களாதேஷுக்கு எதிரான முதல் டி20!
"தோனி எங்கள் முடிவை ஆதரிக்கிறார்" - தேர்வுக்குழு தலைவர் பிரசாத்!
"தோனி எங்கள் முடிவை ஆதரிக்கிறார்" - தேர்வுக்குழு தலைவர் பிரசாத்!
Advertisement