ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய ரிக்கி பாண்டிங்!

Updated: 11 December 2019 17:47 IST

ரிக்கி பாண்டிங் ஏற்கனவே பேஸ்புக்கில் ஒரு அக்கவுண்ட் வைத்திருந்தார். ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது அறிமுகத்தை அறிவித்த ரிக்கி பாண்டிங் தனது பேஸ்புக் கணக்கில் எழுதினார்

Ricky Ponting Makes Debut On Twitter, Instagram; Posts Pictures From Net Session With Son
நெட் செஷனின் போது ரிக்கி பாண்டிங் தனது மகன் பிளெட்சருடன் படத்தை பகிர்ந்தார். © Twitter

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது மகன் பிளெட்சருடன் நெட் செஷன் பதுவுடன் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் அறிமுகமானார். ரிக்கி பாண்டிங் ஏற்கனவே பேஸ்புக்கில் ஒரு அக்கவுண்ட் வைத்திருந்தார். ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது அறிமுகத்தை அறிவித்த ரிக்கி பாண்டிங் தனது பேஸ்புக் கணக்கில் எழுதினார், "முதல் நாள்; நான் இறுதியாக ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருக்கிறேன், என் மகன் பிளெட்சருடன் முதல் நெட் செஷன்". கூடுதலாக, அவர் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் கணக்குகளுக்கான இணைப்புகளையும், பிளெட்சருடனான முதல் நெட் செஷன் படங்களையும் வெளியிட்டார்.

44 வயதான பாண்டிங், 168 டெஸ்ட் போட்டிகள் , 375 ஒருநாள் போட்டிகள், 17 டி20 போட்டிகளில் 1995 முதல் 2012 வரை ஆஸ்திரேலியாவுக்காக விளையடியுள்ளார்

டெஸ்டில் 51.85 சராசரியாக 13378 ரன்கள் எடுத்தார். ஒருநாள் போட்டிகளில், அவர் சராசரியாக 42.03ல் 13704 ரன்கள் எடுத்தார், இதில் 30 சதங்கள் மற்றும் 82 அரைசதங்கள் அடங்கும். குறுகிய வடிவத்தில், பாண்டிங் 28.64 சராசரியாக 401 ரன்கள் எடுத்தார்.

2003 மற்றும் 2007ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவை உலகக் கோப்பை வெற்றிகளுக்கு வழிநடத்தியதைத் தவிர, 2006 மற்றும் 2009ம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் டிராபி வெற்றிகளுக்கு பாண்டிங் தனது தேசிய அணியை வழிநடத்தினார். 2019 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியாவின் உதவி பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டார்.

தனிப்பட்ட கவுரவங்களில், பாண்டிங் 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் ஐ.சி.சி ஆண்டின் சிறந்த வீரர், 2003, 2004 மற்றும் 2006ம் ஆண்டுகளில் ஐ.சி.சி டெஸ்ட் பிளேயர், 2002ம் ஆண்டில் ஒருநாள் சர்வதேச வீரர், 2004, 2006, 2007 மற்றும் 2009ம் ஆண்டுகளில் ஆலன் பார்டர் பதக்கம் வென்றுள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • பேஸ்புக்கில் இருந்த பாண்டிங், இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் அறிமுகமானர்
  • 44 வயதான பாண்டிங் 168 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்
  • பாண்டிங் 2006, 2007ம் ஆண்டுகளில் ஐசிசி சிறந்த வீரர் என்றானார்
தொடர்புடைய கட்டுரைகள்
“என்னைப் போன்ற வீரர் இவர்” - ஆஸி.வீரர் குறித்து பேசிய டெண்டுல்கர்!
“என்னைப் போன்ற வீரர் இவர்” - ஆஸி.வீரர் குறித்து பேசிய டெண்டுல்கர்!
பன்டர் என்ற புனைப்பெயர் எப்படி வந்தது... வெளிப்படுத்திய ரிக்கி பாண்டிங்!
'பன்டர்' என்ற புனைப்பெயர் எப்படி வந்தது... வெளிப்படுத்திய ரிக்கி பாண்டிங்!
IND vs AUS: விராட் கோலியின் உலக சாதனைக்கு இன்னும் ஒரு சதம் தேவை!
IND vs AUS: விராட் கோலியின் உலக சாதனைக்கு இன்னும் ஒரு சதம் தேவை!
"ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் இந்தியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தும்" - ரிக்கி பாண்டிங்
"ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் இந்தியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தும்" - ரிக்கி பாண்டிங்
ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய ரிக்கி பாண்டிங்!
ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய ரிக்கி பாண்டிங்!
Advertisement