ஜீனியஸ் என்றால் ஸ்மித் நினைவுக்கு வருகிறார் - பாண்டிங் புகழாரம்!

Updated: 06 September 2019 09:26 IST

ஸ்மித்தின் பேட்டிங் அணியை வலிமையாக வைத்துள்ளது. அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவுகிறது. ஆட்டத்தை ஒற்றை ஆளாக தன் கடுப்பாட்டில் வைத்துள்ளார் என்றார்.

Steve Smith A "Genius", Ricky Ponting Hails Australian Batsman After Double Century
© AFP

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட்டில் இரட்டை சதமடித்து இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது ஆதிக்கை நிலைநாட்டியுள்ளார் ஸ்டீவ் ஸ்மித். 30 வயதான ஸ்மித் 211 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்தத் தொடரில் ஸ்மித் ஆடிய நான்கு இன்னிஙஸில் 3 சதமடித்துள்ளார். 144,142 மற்றும் 211 என விளாசியுள்ளார். இவர் ஓராண்டு தடைக்குப்பின் ஆடும் முதல் டெஸ்ட் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் அவரை கிதிக்கெட்டின் ஜூனியஸ் என்கிறார்கள் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

இந்த இரட்டை சதத்துக்கு பின் இந்த தொடரில் அவரது சராசரி 147.25 ஆக உள்ளது.

ஸ்மித்தை பற்றி நினைத்தாலே ஜீனியஸ் என்ற வார்த்தை தான் நினைவுக்கு வருகிறது என்றார் பாண்டிங்.

ஸ்மித்தின் பேட்டிங் அணியை வலிமையாக வைத்துள்ளது. அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவுகிறது. ஆட்டத்தை ஒற்றை ஆளாக தன் கடுப்பாட்டில் வைத்துள்ளார் என்றார்.

அவரது 99 இன்னிங்க்ஸில் வெறும் 9 முறை மட்டுமே எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆகியுள்ளார். இது ஒரு சிறந்த வீரர் என்பதை காட்டுகிறது.

ஸ்மித் இந்த போட்டிக்கு முன் ஐசிசி தரவரிசையில் கோலியிடமிருந்து முதலிடத்தை பறித்தார். இவர் கிரிக்கெட்டின் அடுத்த பிராட்மேன் என கொண்டாடப்படுகிறஅர்.

பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் சராசரியில் 64.64 பெற்று ஸ்மித் உள்ளார்.

பிராட்மேன், ஸ்மித் இருவரை ஒப்பிட்டு ஆஸ்திரேலிய ஊடகஙகள் செய்தி வெளியிட்டுள்ள்ன. இந்த தொடரில் ஸ்மித்தின் குறைந்த பட்ச ஸ்கோரே 92.

இரட்டை சதம் ஸ்மித்தின் வருகையை பதிவு செய்துள்ளது என்று டேப்லாய்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"அவரை தாக்கியிருப்பேன்" - ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை விமர்சித்த சோயிப் அக்தர்
"அவரை தாக்கியிருப்பேன்" - ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை விமர்சித்த சோயிப் அக்தர்
Australia vs Sri Lanka: ஸ்டம்ப்பிங் செய்தும் அவுட் ஆகாத ஸ்டீவ் ஸ்மித்
Australia vs Sri Lanka: ஸ்டம்ப்பிங் செய்தும் அவுட் ஆகாத ஸ்டீவ் ஸ்மித்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
Advertisement