ஆஸ்திரேலியா அணியின் புதிய துணை பயிற்சியாளர் யார் தெரியுமா?

Updated: 08 February 2019 16:40 IST

3 உலக கோப்பைகளை வென்ற ரிக்கி பாண்டிங்கை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் ஆட்டம் முன்னேறும் என எதிர்ப்பார்க்கலாம்.

Ricky Ponting Appointed Australia Assistant Coach For World Cup
இதுவரை 3 உலககோப்பைகளை வென்றுள்ளார் பாண்டிங் © AFP

ஆண்கள் கிரிக்கெட் உலககோப்பை தொடர் வரும் மே மாதம் இங்கிலாந்தில் நடக்கவுள்ளது.

ஆஸ்திரேலியா அணி ஒரு நாள் போட்டிகளில் தடுமாறி வருகிறது. இதனால் ஆஸ்திரேலியா அணியின் புதிய துணை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் நீடிக்கிறார்.

3 உலக கோப்பைகளை வென்ற ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் ஆட்டம் முன்னேறும் என எதிர்ப்பார்க்கலாம்.

375 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாண்டிங், இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலியா தொடரில் இருந்து துணை பயிற்சியாளராக பொறுப்பு ஏற்கிறார்.

‘நானும் அவரும் ஏற்கனவே ஒன்றாக பணியாற்றிருக்கோம். எனவே அவரது அனுபவம் என்பது இந்த அணிக்கு இன்றியமையாதது' என்றார் லாங்கர்.

‘இந்த அணியின் வீரர்கள் மீது எனக்கு அதீத நம்பிக்கையுள்ளது. அவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி' என்றார் பாண்டிங்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளராக லாங்கர் நீடிக்கிறார்
  • 375 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் பாண்டிங்
  • 3 உலககோப்பைகளை வென்றுள்ளார் பாண்டிங்
தொடர்புடைய கட்டுரைகள்
ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்வாரா கோலி?
ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்வாரா கோலி?
"டெல்லி ப்ளே ஆஃப்க்கு தகுதிபெற கங்குலி, பாண்டிங்தான் காரணம்" - தவான்
"டெல்லி ப்ளே ஆஃப்க்கு தகுதிபெற கங்குலி, பாண்டிங்தான் காரணம்" - தவான்
தோல்விக்கு பிட்சை குறை சொல்லும் ரிக்கி பாண்டிங்!
தோல்விக்கு பிட்சை குறை சொல்லும் ரிக்கி பாண்டிங்!
"இந்தியாவின் நான்காம் நிலை வீரராக பன்ட் ஆட வேண்டும்" - ரிக்கி பாண்டிங்
"இந்தியாவின் நான்காம் நிலை வீரராக பன்ட் ஆட வேண்டும்" - ரிக்கி பாண்டிங்
'உலககோப்பை வெல்ல ஆஸ்திரேலியாவிற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால்...' - பாண்டிங் பேட்டி
Advertisement