''கோலியும், புஜாராவும் சுத்த தங்கம்'' - வெற்றி குறித்து விவ் ரிச்சர்ட்ஸ்!

Updated: 09 January 2019 13:57 IST

இந்திய வீரர் பும்ராஹ் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி, பந்துவீச்சாளர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வரும் ஜனவரி 12ம் தேதி துவங்கவுள்ளது.

India vs Australia: Vivian Richards Posts Special Message For Virat Kohli, Cheteshwar Pujara
© AFP

இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 72 வருடத்தில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இதற்கு மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரரான விவ் ரிச்சர்ட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பேட்டிங் ஹீரோக்களான கோலி மற்றும் புஜாராவை பாரட்டியுள்ளார். குறிப்பாக புஜாராவை இந்திய அணிக்கு கிடைத்த சுத்த தங்கம் என்று பாராட்டியுள்ளார். மேலும் தனது நண்பர் எனக்கூறி அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1947ம், ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி 72 ஆண்டுகளில் முதல்முறையாக தொடரை வென்றுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக தொடரை வென்ற ஆசிய அணியும் இந்தியாதான்.

புஜாரா இந்தத் தொடரில் 521 ரன்களையும், பன்ட் 350 ரன்களையும், கோலி 282 ரன்களையும் குவித்து முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

இந்திய வீரர் பும்ராஹ் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி, பந்துவீச்சாளர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வரும் ஜனவரி 12ம் தேதி துவங்கவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!
"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
"ஆண்டிகுவாவின் மன்னன்" - விவியன் ரிச்சர்ட்ஸை புகழ்ந்த ரவி சாஸ்திரி!
"ஆண்டிகுவாவின் மன்னன்" - விவியன் ரிச்சர்ட்ஸை புகழ்ந்த ரவி சாஸ்திரி!
கோலியின் கேப்டன்ஸி இம்ரான்கானை நினைவுபடுத்துகிறது : ரவி சாஸ்திரி
கோலியின் கேப்டன்ஸி இம்ரான்கானை நினைவுபடுத்துகிறது : ரவி சாஸ்திரி
''கோலியும், புஜாராவும் சுத்த தங்கம்'' - வெற்றி குறித்து விவ் ரிச்சர்ட்ஸ்!
Advertisement