இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் பங்கேற்பு

Updated: 24 July 2018 20:12 IST

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இருபது ஓவர், ஒரு நாள் போட்டிகள் கொண்ட இரு தொடர்கள் முடிவடைந்துள்ளன

Ravichandran Ashwin To Return To Worcestershire After England Test Series
© AFP

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இருபது ஓவர், ஒரு நாள் போட்டிகள் கொண்ட இரு தொடர்கள் முடிவடைந்துள்ளன. அடுத்து ஆகஸ்டு 1 ஆம் தேதி தொடங்க இருக்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட உள்ளன. 

இங்கிலாந்திற்கு எதிரான இரண்டு தொடர்களில் பங்கேற்காத அஷ்வின், டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளார். அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களாக களம் இறங்க உள்ளனர்.

இது குறித்து பேட்டியளித்த அஷ்வின், "இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. போட்டியின் போது ஏற்படும் கடினமான சூழ்நிலைகளை சிறப்பாக எதிர் கொள்ள பயிற்சி எடுக்க வேண்டும்" என்றார்

இதற்கு முன்பு, ஜூன் மாதம் நடைப்பெற்ற ஆப்கானிஸ்தானிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஷ்வின் கலந்து கொண்டார்.  இதுவரை, விளையாடியுள்ள 58 டெஸ்ட் போட்டிகளில் 316 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் முடிந்த பின்னர், இங்கிலாந்தில் நடைப்பெறும் கவுண்டி கோப்பையில் அஷ்வின் விளையாட உள்ளார். கவுண்டி தொடரில் இந்திய வீரர் அஷ்வின் விளையாடுவதற்கு, பிசிசிஐ அனுமது அளித்துள்ளது. செப்டம்பர் மாதம் நடைப்பெற உள்ள எசெக்ஸ், யோர்க்ஷையர் அணிகளுக்கு எதிரான போட்டியில் அஷ்வின் பங்கேற்க உள்ளார். 
 

Comments
ஹைலைட்ஸ்
  • ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன
  • இரண்டு தொடர்களில் பங்கேற்காத அஷ்வின், டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளார்
  • கவுண்டி கிரிக்கெட் வோர்செஸ்ட்ஷையர் அணிக்கு விளையாட அஷ்வின்
தொடர்புடைய கட்டுரைகள்
Ravichandran Ashwin Birthday: வாழ்த்து மழை பொழிந்த கிரிக்கெட் வீரர்கள்!
Ravichandran Ashwin Birthday: வாழ்த்து மழை பொழிந்த கிரிக்கெட் வீரர்கள்!
இந்திய அணியினருடன்
இந்திய அணியினருடன் 'போட் பார்ட்டி' கொண்டாடிய அனுஷ்கா ஷர்மா!
"ஆடும் லெவனில் அஸ்வின் இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது" - சுனில் கவாஸ்கர்!
"ஆடும் லெவனில் அஸ்வின் இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது" - சுனில் கவாஸ்கர்!
டிஎன்பிஎல் போட்டியில் வினோத பந்துவீச்சுக்கு பாராட்டு பெற்ற அஸ்வின்!
டிஎன்பிஎல் போட்டியில் வினோத பந்துவீச்சுக்கு பாராட்டு பெற்ற அஸ்வின்!
டிஎன்பிஎல்: சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அஸ்வினின் வித்தியாசமான பந்துவீச்சு!
டிஎன்பிஎல்: சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அஸ்வினின் வித்தியாசமான பந்துவீச்சு!
Advertisement