"மீண்டும் குகைக்கு வந்த லெஜண்ட்" - தோனியுடன் புகைப்படம் பகிர்ந்த ரவி சாஸ்திரி

Updated: 22 October 2019 15:00 IST

எம்.எஸ். தோனியை மீண்டும் இந்திய டிரஸ்ஸிங் ரூமில் பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஏனெனில் அவர் 2019 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியதிலிருந்து அணிக்காக எந்த போட்டியிலும் ஈடுபடவில்லை.

Ravi Shastri Poses For Picture With MS Dhoni, Calls Him "True Indian Legend"
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தோனியுடனான புகைப்படத்தை வெளியிட்டார். © Twitter

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை வென்று, தொடரை கைப்பற்றிய பிறகு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தோனியுடனான புகைப்படத்தை வெளியிட்டார். "ஒரு அருமையான தொடர் வெற்றிக்கு பின்னர் ஒரு உண்மையான இந்திய லெஜண்ட்டை அவரது குகையில் காண முடிந்தது" என்று சாஸ்திரி புகைப்படத்துடன் பகிர்ந்தார். இந்த தொடரின் இறுதி டெஸ்டின் நான்காவது நாளின் தொடக்கத்தில் போட்டியை முடித்த பின்னர் ராஞ்சியைச் சேர்ந்த எம்.எஸ் தோனி, டீம் இந்தியா டிரஸ்ஸிங் ரூமில் இருந்தார்.

எம்.எஸ். தோனியை மீண்டும் இந்திய டிரஸ்ஸிங் ரூமில் பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஏனெனில் அவர் 2019 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியதிலிருந்து அணிக்காக எந்த போட்டியிலும் ஈடுபடவில்லை.

"சிறந்த புகைப்படம்," ஒருவர் ட்விட் செய்தார், "உண்மையான லெஜண்ட்," இன்னொருவர்.

"அவரை மீண்டும் அணியில் சேருங்கள் ரவி சார்," என்று ஒருவர் ட்விட் செய்தார்.

"கேப்டன் கூல், திரும்பி வாருங்கள்," இன்னொரு ரசிகர் எழுதினார்.

ஜூலை மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் தோற்று இந்திய அணி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது. அதன்பின் தோனி 2 மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

பின்னர் அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரைத் தவறவிட்டார். மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 ஐ தொடருக்கான அணியில் சேர்க்கப்படவில்லை.

பிசிசிஐ முன்னதாக எம்.எஸ்.தோனி மற்றொரு உள்ளூர் ஹீரோ ஷாபாஸ் நதீமுடன் டிரஸ்ஸிங் ரூமில் பேசும் புகைப்படத்தை ட்விட் செய்தது. தேசிய அணியில் இருந்த போது காயமடைந்த குல்தீப் யாதவுக்கு பதிலாக நதீம் தனது சொந்த மைதானத்தில் ஒரு கனவு டெஸ்ட்டில் அறிமுகமானார். போட்டியில் அவர் தொடர்ச்சியாக இரண்டு பந்து வீச்சில் இரண்டு விக்கெட்டுகள் உட்பட நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

"ஓ மை காட்!!! அவருக்கு சொந்தமான இடத்துக்கு யார் வந்துள்ளார் என்று பாருங்கள். டிரஸ்ஸிங் ரூமில் மாஹி!!!" என்று ஒரு ரசிகர் எழுதினார்.

ராஞ்சியில் நடந்த வெற்றியின் மூலம், இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தங்களது சரியான சாதனையைத் தக்க வைத்துக் கொண்டது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்" - எதிர்காலம் குறித்து தோனி!
"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்" - எதிர்காலம் குறித்து தோனி!
"தோனியும், கோலியும் என்னை மதிக்கிறார்கள்" - எம்.எஸ்.கே.பிரசாத்
"தோனியும், கோலியும் என்னை மதிக்கிறார்கள்" - எம்.எஸ்.கே.பிரசாத்
Advertisement