அணி வீரர்களுடன் எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை பகிர்ந்த ரவி சாஸ்திரி!

Updated: 25 September 2019 12:48 IST

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் மற்றும் முன்னாள் இந்திய வீரர்களுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பழைய நினைவுகள் குறித்து பேசினார்.

Ravi Shastri Shares Throwback Picture, Calls Himself "Light Traveller" Unlike Other Former Teammates
ரவி சாஸ்திரியின் பயிற்சிக்கு கீழ், மேற்கிந்திய தீவுகளை அனைத்து வடிவிலான போட்டிகளிலும் இந்தியா வென்றது. © Instagram

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் மற்றும் முன்னாள் இந்திய வீரர்களுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பழைய நினைவுகள் குறித்து பேசினார். தன்னுடைய அணியினருடன் இருக்கும் கறுப்பு மற்றும் வெள்ளை புகைப்படத்தில் சிறு வயது ரவி சாஸ்திரியை காணலாம். பெரும்பாலான வீரர்கள் அவர்களுடன் நிறைய பொருட்களை எடுத்துச் சென்றாலும், எந்தவிதமான பொருட்களும் இல்லாத ரவி சாஸ்திரி தன்னை அனைவரையும் "எளிமையான பயணி" என்று கூறினார். "மற்ற வீரர்களை போல் அல்லாமல், நான் எப்போது எளிமையான பயணி" என்று ரவி சாஸ்திரி புகைப்படத்துடன் பகிர்ந்தார்.

ரவி சாஸ்திரி, 2021 டி20 உலகக் கோப்பை வரை தலைமை பயிற்சியாளராக நீட்டிக்கபட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் இரண்டு ஆண்டு காலம் தொடரும்.

கிரிக்கெட் மேலாளர் (2007 பங்களாதேஷ் சுற்றுப்பயணம்), அணி இயக்குநர் (2014-2016) மற்றும் தலைமை பயிற்சியாளராக (2017-2019) சுருக்கமாக பணியாற்றிய தேசிய அணியுடன் சாஸ்திரி மேற்கொண்ட நான்காவது ஒப்பந்தம் இதுவாகும்.

ரவி சாஸ்திரியின் பயிற்சிக்கு கீழ், மேற்கிந்திய தீவுகளை அனைத்து வடிவிலான போட்டிகளிலும் இந்தியா வென்றது. அதன்பிறகு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட உள்நாட்டு டி20 தொடரில் 1-1 என்று போட்டி சமமானது.

இந்தியா அடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை அக்டோபர் மாதம் 2ம் தேதி விசாகப்பட்டினத்தில் ஆடவுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்ற பிறகு புள்ளிப்பட்டியலில் 120 புள்ளிகளுடன் உள்ளது.

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. அந்த இரு அணிகளுக்கு இடையில் நடந்த போட்டி சமமானது.

ஆஷஸ் 2019 தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்ததால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ரவி சாஸ்திரி, பங்களாதேஷ் பயிற்சியாளர் நேரடியாக ஈடன் கார்டனுக்கு சென்றனர்!
ரவி சாஸ்திரி, பங்களாதேஷ் பயிற்சியாளர் நேரடியாக ஈடன் கார்டனுக்கு சென்றனர்!
India vs Bangladesh: மீம்ஸ்களுக்கு இரையாகிய ரவி சாஸ்திரியின் ட்விட்டர் பதிவு!
India vs Bangladesh: மீம்ஸ்களுக்கு இரையாகிய ரவி சாஸ்திரியின் ட்விட்டர் பதிவு!
"என்னுடைய மிகப் பெரிய விமர்சகர்" - தாய்க்கு ரவி சாஸ்திரியின் வாழ்த்து!
"என்னுடைய மிகப் பெரிய விமர்சகர்" - தாய்க்கு ரவி சாஸ்திரியின் வாழ்த்து!
விராட் கோலிக்கு வாழ்த்து சொன்ன ரவி சாஸ்திரி... கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்!
விராட் கோலிக்கு வாழ்த்து சொன்ன ரவி சாஸ்திரி... கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்!
"தொடக்க வீரர் வாய்ப்பு கொடுத்த கோலி, ரவி சாஸ்திரிக்கு நன்றி" - ரோஹிர் ஷர்மா
"தொடக்க வீரர் வாய்ப்பு கொடுத்த கோலி, ரவி சாஸ்திரிக்கு நன்றி" - ரோஹிர் ஷர்மா
Advertisement