தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு இறுதி செய்யப்பட்டிருக்கும் 6 பேர் யார்?

Updated: 13 August 2019 12:43 IST

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தலைமை தாங்கும் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் உரை அளிக்க வேண்டும். பயிற்சியாளர் தேர்வு முடிவு இந்த வார இறுதி அல்லது அடுத்த வார தொடக்கத்தில் தெரிவிக்கப்படும்.

Ravi Shastri Among Six Candidates Shortlisted For India
ரவி சாஸ்திரியுடன் சேர்த்து இன்னும் 5 நபர்கள் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இறுதி செய்யப்பட்டுள்ளனர். © AFP

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் சேர்த்து இன்னும் 5 நபர்கள் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இறுதி செய்யப்பட்டுள்ளனர். உலகக் கோப்பைக்கு பிறகு 45 நாட்கள் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்ட சாஸ்திரியுடன், லால்சந்த் ராஜ்புட் மற்றும் ராபின் சிங் ஆகிய இரு இந்தியர்கள் இந்தப் பதவிக்கு இறுதி செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் நியூசிலாந்து பயிற்சியாளர் மைக் ஹெஸன், முன்னாள் இலங்கை பயிற்சியாளர் டாம் மூடி மற்றும் முன்னாள் ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் ஆகிய வெளிநாட்டை சேர்ந்த மூவரும் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தலைமை தாங்கும் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் உரை அளிக்க வேண்டும். பயிற்சியாளர் தேர்வு முடிவு இந்த வார இறுதி அல்லது அடுத்த வார தொடக்கத்தில் தெரிவிக்கப்படும்.

இந்திய அணிக்கு உலகக் கோப்பை வென்று தந்த முதல் கேப்டன் கபில் தேவ் தவிர, கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் அன்ஷுமான் கேவார்ட் மற்றும் பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசுவாமி ஆகியோர் உள்ளனர்.

உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி வெளியேறிய பிறகு ரவி சாஸ்திரியை பலரும் விமர்சித்தனர். ஆனால், மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்துக்கு முன்பு கேப்டன் விராட் கோலி, ரவி சாஸ்திரிக்கு சாதகமாக பேசினார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக தற்போது சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஶ்ரீதர் என அனைவருக்கும் 45 நாட்கள் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. இது செப்டம்பர் 3ம் தேதி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் வரை தொடரும்.

உலகக் கோப்பை டி20 2016 மற்றும் உலகல் கோப்பை ஒருநாள் 2015 மற்றும் 2019 ஆகிய போட்டிகளில் தோற்றாலும், சாஸ்திரி-கோலி ஜோடி ஆஸ்திரேலியாவில் ஒரு வரலாற்று தொடர் வெற்றியுடன் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற உதவியது.

அனில் கும்ப்ளே வெளியேறிய பின்னர் 2017 ஆம் ஆண்டில் மீண்டும் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு உலக டி 20 அரையிறுதியில் இந்தியா தோற்றது வரை சாஸ்திரி ஜூன் 2016 வரை அணி இயக்குநராக இருந்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனி ஒருநாள் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு எடுக்கக்கூடும்" - ரவி சாஸ்திரி!
"தோனி ஒருநாள் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு எடுக்கக்கூடும்" - ரவி சாஸ்திரி!
ரவி சாஸ்திரி முதல் ஹர்பஜன் சிங் வரை... இந்திய vs ஆஸி .தொடரில் கவனிக்க வேண்டிய வீரர்கள்!
ரவி சாஸ்திரி முதல் ஹர்பஜன் சிங் வரை... இந்திய vs ஆஸி .தொடரில் கவனிக்க வேண்டிய வீரர்கள்!
ரவி சாஸ்திரியின் பதிவில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மைக்கேல் வாகன்!
ரவி சாஸ்திரியின் பதிவில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மைக்கேல் வாகன்!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
ரவி சாஸ்திரி, பங்களாதேஷ் பயிற்சியாளர் நேரடியாக ஈடன் கார்டனுக்கு சென்றனர்!
ரவி சாஸ்திரி, பங்களாதேஷ் பயிற்சியாளர் நேரடியாக ஈடன் கார்டனுக்கு சென்றனர்!
Advertisement