"ஸ்ரேயாஸ், மணீஷ் பாண்டே 4வது இடத்துக்கு சிறந்தவர்கள்" - விக்ரம் ராத்தோர்!

Updated: 06 September 2019 18:20 IST

இந்திய அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள விக்ரம் ராத்தோர், அணியின் நான்காம் இடத்தில் இருக்கும் பிர்சனைகள் குறித்து பேசியுள்ளார்.

Vikram Rathour Backs Two Players To Solve The No. 4 Issue
விக்ரம் ராத்தோர் இந்திய அணிக்காக 6 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் இடம்பெற்றுள்ளார். © Twitter

இந்திய அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள விக்ரம் ராத்தோர், அணியின் நான்காம் இடத்தில் இருக்கும் பிர்சனைகள் குறித்து பேசியுள்ளார். உலகக் கோப்பையில் மிடில் ஆர்டர் சொதப்பியதால், அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. உலகக் கோப்பைக்கு பிறகு, ஸ்ரேயாஸ் ஐயர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் 136 ரன்கள் குவித்தார். பிசிசிஐயில் பேசிய ராத்தோர், வெள்ளை பந்து கிரிக்கெட்டில் நான்காவது இடமும், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க இடமும் முதன்மை கவலையாக இருப்பதாக கூறியுள்ளார்.

"உலகக் கோப்பை மட்டுமல்ல. இந்த ஒரு இடத்தை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டர் சரியாக இல்லை, அதை நாம் சரி செய்ய வேண்டியுள்ளது. ஸ்ரேயாஸ் கடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாத், அந்த இடத்துக்கு மணீஷ் பாண்டேவும் உள்ளார். இந்த இரு வீரர்களும் இந்திய ஏ அணியிலும் சிறப்பாக ஆடியுள்ளனர். இவர்கள் இருவர்களும் தங்களின் வேலையை சரியாக செய்வார்கள், அது குறித்து எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. டாப் லெவலில் யார் என்பது தான் இப்போது முக்கியம். அவர்களுக்கு உற்சாகம் அளித்து, சரியான பயிற்சி கொடுத்தால், நீண்ட காலம் அவர்கள் தொடர வாய்ப்புள்ளது. சிறப்பாக ஆடும் அளவிற்கு அவர்களுக்கு திறமை உள்ளது," பிசிசிஐ டிவியில் ராத்தோர் கூறினார்.

கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் டெஸ்ட் போட்டிகளில் டாப் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதுகுறித்து பேசிய ராத்தோர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களுக்கு இடையில் சாதாரணமாக போட்டியே உள்ளது என்றார்.

"டெஸ்ட் போட்டிகளில் பார்ட்னர்ஷிப் குறித்த கவலைதான் அதிகம் உள்ளது. எங்களுக்கு ஆப்ஷன்ஸ் உள்ளன, அதுவும் ஆரோக்கியமான போட்டியாக உள்ளது. அவர்கள் ஃபீல்டில் நிலைத்து ஆட சரியான வழி அமைத்து தர வேண்டும்" என்றார்.

இந்திய பேட்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் தான் ராத்தோருக்கு முதல் வேலையாக அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 3 டி20 போட்டிகள் ஆடவுள்ளது. அந்த போட்டிகள் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கவுள்ளன. அதன்பின் 3 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் ஆடவுள்ளன.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"ரிஷப் பன்ட் குறித்து மீடியாவில் கருத்து சொல்வதை நிறுத்துங்கள்" - யுவராஜ் சிங்!
"ரிஷப் பன்ட் குறித்து மீடியாவில் கருத்து சொல்வதை நிறுத்துங்கள்" - யுவராஜ் சிங்!
"ஸ்ரேயாஸ், மணீஷ் பாண்டே 4வது இடத்துக்கு சிறந்தவர்கள்" - விக்ரம் ராத்தோர்!
"ஸ்ரேயாஸ், மணீஷ் பாண்டே 4வது இடத்துக்கு சிறந்தவர்கள்" - விக்ரம் ராத்தோர்!
"ஜாண்டி ரோட்ஸ் ஏன் தேர்வு செய்யப்படவில்லை" - விளக்கமளித்த எம்.எஸ்.கே.பிரசாத்!
"ஜாண்டி ரோட்ஸ் ஏன் தேர்வு செய்யப்படவில்லை" - விளக்கமளித்த எம்.எஸ்.கே.பிரசாத்!
Advertisement