Listen to the latest songs, only on JioSaavn.com
 

ரஷித்கான் ஹாட்ரிக்கில், அயர்லாந்தை வொயிட்வாஷ் செய்த ஆப்கானிஸ்தான்!

Updated: 25 February 2019 15:27 IST

டேராடூனில் அயர்லாந்துக்கு எதிரான நடந்த டி20 கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்று தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.

Afghanistan vs Ireland, 3rd T20I: Rashid Khan Hat-Trick Seals Afghanistan T20I Sweep Against Ireland
அயர்லாந்து, ரஷித்கானின் 5/27 என்ற சிற‌ப்பான பந்துவீச்சால் தோல்வியுற்றது. © Twitter

டேராடூனில் அயர்லாந்துக்கு எதிரான நடந்த டி20 கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்று தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய அயர்லாந்து, ரஷித் கானின் ஹாட்ரிக் விக்கெட்டால் நிலை தடுமாறி 32 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து தோல்வியை தழுவியது. இதே மைதானத்தில் 278 என்ற சாதனை ஸ்கோரை சென்ற போட்டியில் பதிவு செய்த ஆப்கானிஸ்தான் இந்த போட்டியிலும் முகமது நபியின் 36 பந்தில் 81 ரன் குவிப்பால் 210 ரன்களை எட்டியது. பின்னர் ஆடிய அயர்லாந்து ரஷித்கானின் 5/27 என்ற சிற‌ப்பான பந்துவீச்சால் தோல்வியுற்றது.

அயர்லாந்து இன்னிங்ஸில் கெவின் ஓ பிரைன் மற்றும் ஆன்டி ப‌ல்பிரின் இரண்டாவது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்து மிரட்டினர். ஆட்டத்தின் 18வது ஓவரில் 74 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருந்த ஓ பிரைனை வீழ்த்தினார் ரஷித் கான். 

ஜார்ஜ் டோக்கோரெல், கெட்கடே மற்றும் சிமி சிங்கை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி டி20 போட்டிகளின் முதல் ஹாட்ரிக்கை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை படைத்தார். 

முன்னதாக நபி 6 பவுண்டரி 7 சிக்ஸர்களுடன் அயர்லாந்து பந்துவீச்சை துவம் சம் செய்தார். அயர்லாந்து பந்துவீச்சாளர் ரான்கின் 4 ஓவர்களில் 53 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

இதே மைதானத்தில் இரு அணிகளும் வரும் வியாழன் முதல் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், பிறகு ஒரு டெஸ்ட் போட்டியிலும் ஆடவுள்ளன. 

Comments
ஹைலைட்ஸ்
  • ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் பந்துவீச்சாளர் ரஷித் கானின்
  • ஜார்ஜ் டோக்கோரெல், கெட்கடே மற்றும் சிமி சிங்கை அடுத்தடுத்த வீழ்த்தினார்
  • 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடியது அயர்லாந்து
தொடர்புடைய கட்டுரைகள்
ஆப்கன் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!!
ஆப்கன் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!!
“ஆப்கானிஸ்தானுக்காக முதல் ‘சதம்’ அடித்த ரஷீத் கான்”- வைரல் மீம்ஸ்!
“ஆப்கானிஸ்தானுக்காக முதல் ‘சதம்’ அடித்த ரஷீத் கான்”- வைரல் மீம்ஸ்!
உலகக் கோப்பையில் வைரலான ஷெஷாத், ரஷித் டான்ஸ்!
உலகக் கோப்பையில் வைரலான ஷெஷாத், ரஷித் டான்ஸ்!
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
வாட்சனை முறைத்த ரஷித்கானை கலாய்த்த நெட்டிசன்கள்!
வாட்சனை முறைத்த ரஷித்கானை கலாய்த்த நெட்டிசன்கள்!
Advertisement