Listen to the latest songs, only on JioSaavn.com
 

ஆஸியில் சிறப்பாக ஆட ட்ராவிட்டின் அறிவுரைதான் காரணம்- மயன்க் அகர்வால்

Updated: 04 January 2019 12:24 IST

மயன்க் அகர்வால், முதல் இன்னிங்ஸில் 76 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 42 ரன்களும் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.

India vs Australia: Rahul Dravid Helped Me Manage My Mental Energies, Says Mayank Agarwal
இரண்டவது இன்னிங்ஸில், டாப் ஆர்டர் 40 ரன்னுக்குள் சுருண்ட போது மயன்க் மட்டும் நின்று சிறப்பாக ஆடினார். © AFP

இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் தடுமாற்றமாக பார்க்கப்படுவது துவக்க வீரர்கள் தான். முதல் இரண்டு டெஸ்ட்டில் விஜய், ராகுல் இணை சொதப்பியதால், மயன்க் அகர்வால் மற்றும் விஹாரி மூன்றாவது டெஸ்ட்டில் துவக்க வீரர்களாக களமிறங்கினர். 

மயன்க அகர்வால் மூன்றாவது டெஸ்ட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்ஸில் 76 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 42 ரன்களும் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். குறிப்பாக இரண்டவது இன்னிங்ஸில், டாப் ஆர்டர் 40 ரன்னுக்குள் சுருண்ட போது மயன்க் மட்டும் நின்று சிறப்பாக ஆடினார்.

"ஆஸ்திரேலியாவில் நான் சிறப்பாக ஆட எனக்கு இந்திய முன்னாள் கேப்டனும், இந்தியா ஏ அணியின் பயிற்சியாளருமான ராகுல் ட்ராவிட்டின் அறிவுரைதான் காரணம்" என்றார். 

''நான்கு முதல் ஆறு மாதகாலமாக ராகுல் ட்ராவிட்டின் கீழ் ஆடியது மிகுந்த மகிழ்ச்சியான, உற்சாகமான விஷயம். அவரது அறிவுரைகள் மன ரீதியாக ஃபிட்டாக வைத்திருக்க உதவியது'' என்றார். 

"நாதன் லயன் பந்தை அடித்து ஆடவே விரும்பினேன். ஆனால், விக்கெட்டை இழந்து விட்டேன். அடுத்தமுறை அந்தத் தவற்றை திரும்ப செய்ய மாட்டேன்" என்றும் கூறியிருந்தார். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
கொரோனாஅச்சுறுத்தல்: வீட்டிலிருந்து ஃபிட்னஸ் கோல்ஸ் கொடுக்கும் மயங்க் அகர்வால்!
கொரோனாஅச்சுறுத்தல்: வீட்டிலிருந்து ஃபிட்னஸ் கோல்ஸ் கொடுக்கும் மயங்க் அகர்வால்!
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தவறவிட்ட விராட் கோலி, முன்னேறும் ஸ்மித்!
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தவறவிட்ட விராட் கோலி, முன்னேறும் ஸ்மித்!
“போஸ் கொடுப்பதை நிறுத்திவிட்டு விளையாடுங்கள்” - இந்திய அணியை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
“போஸ் கொடுப்பதை நிறுத்திவிட்டு விளையாடுங்கள்” - இந்திய அணியை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
விடுமுறை நாளை புட்டாருருவில் கொண்டாடிய இந்திய அணி!
விடுமுறை நாளை புட்டாருருவில் கொண்டாடிய இந்திய அணி!
இந்தியா vs நியூசிலாந்து: 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது நியூசிலாந்து!
இந்தியா vs நியூசிலாந்து: 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது நியூசிலாந்து!
Advertisement