Listen to the latest songs, only on JioSaavn.com
 

'ஏன் கிரிக்கெட் பார்ப்பதில்லை?' என்ற கேள்விக்கு அஸ்வின் கூறிய பதில்!

Updated: 05 October 2019 13:59 IST

இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்படாதபோது, அஸ்வின் ஏன் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தினார் என்று கேட்கப்பட்டது.

R Ashwins Cheeky Response To Why He Doesnt Watch Cricket Anymore - Watch
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 27வது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ரவிச்சந்திரன் அஸ்வின் நட்சத்திர வீரராக மாறினார். © Twitter

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான விசாகபட்டினத்தில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 27வது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ரவிச்சந்திரன் அஸ்வின் நட்சத்திர வீரராக மாறினார். தென்னாப்பிரிக்கா 3வது நாளை 8 விக்கெட்டுக்கு 385 ரன்களில் முடித்ததால், இந்தியாவை விட 118 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்டம்பில் பின்தங்கியிருந்தது. அஸ்வின் 2வது நாள் தாமதமாக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, வெள்ளிக்கிழமை தனது எண்ணிக்கையில் மேலும் மூன்று விக்கெட்டுகளைச் சேர்த்திருந்தார். அன்றைய ஆட்டத்திற்குப் பிறகு, அஸ்வின் ஊடகங்களுக்கு உரையாற்றினார். அங்கு அவர் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்படாதபோது ஏன் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தினார் என்று கேட்கப்பட்டது. ஆஃப்-ஸ்பின்னர் ஒரு நகைச்சுவை பதிலுடன் வந்து, "இப்போது வீட்டில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்" என்று கூறினார்.

"தொடக்கத்தில், எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இரவுகளில் நன்றாக தூங்க மாட்டார்கள். நகைச்சுவைகளைத் தவிர, ஒவ்வொரு முறையும் நான் டிவியில் விளையாட்டைப் பார்க்கும் போது, நான் விளையாட்டை விளையாட விரும்புவதைப் போல உணர்ந்தேன். நான் போட்டிகளிலிருந்து விலகியிருப்பதாக உணர்ந்தேன். இது மிகவும் இயற்கையானது, எல்லோரும் அதைக் கடந்து செல்கிறார்கள்," என்றார் அஸ்வின்.

33 வயதான அவர் கிரிக்கெட்டிலிருந்து விலகி இருக்கும்போது புத்தகங்களைப் படிக்க முயற்சித்ததாக கூறினார்.

"நான் பொதுவாக என் வாழ்க்கையிலும் வேறு சில விஷயங்களைச் செய்ய முயற்சித்தேன். புத்தகங்கள் மற்றும் தொல்பொருளியல் விஷயங்கள், நான் ரசித்தேன்," என்று அஸ்வின் கூறினார்.

2018 டிசம்பரிலிருந்து தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த அஸ்வின், இந்தியாவுக்காக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவது போல எதுவும் இல்லை என்று கூறினார்.

"நான் திரும்பி வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டுக்காக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவது போல் எதுவும் இல்லை. இந்த இடம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆனால் நாட்டிங்ஹாமிற்கும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய போதும் நான் அனுபவித்தேன். ஒன்று மற்றதை விட குறைவு அல்ல" என்று கூறினார்.

ஆஃப்-ஸ்பின்னர் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார். மேலும்,கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பது கடினமான பணி என்று அஸ்வின் ஒப்புக்கொண்டார்.

இந்த போட்டியில், 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வேகமான இடது கை பந்து வீச்சாளராக ரவீந்திர ஜடேஜா சாதனை புத்தகங்களில் நுழைந்தார். டீன் எல்கர் மிக நீண்ட வடிவத்தில் ஜடேஜாவின் 200வது விக்கெட்டாக அவுட் ஆனார்.

ஜடேஜா 44 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தினார். மேலும், அவர் ரங்கனா ஹெராத் (47 டெஸ்ட்) மிட்செல் ஜான்சன் (49 டெஸ்ட்), வாசிம் அக்ரம் (51 போட்டிகள்) ஆகியோரை முந்தினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“வெளியே செல்லாதீர்கள்... உலகக் கோப்பைக்கு இன்னும் நேரம் உள்ளது” - ரோஹித் ஷர்மா!
“வெளியே செல்லாதீர்கள்... உலகக் கோப்பைக்கு இன்னும் நேரம் உள்ளது” - ரோஹித் ஷர்மா!
“வீட்டை விட்டு வெளியே வந்தால் இதுதான் நிலைமை” - நகைச்சுவையாக ட்விட் செய்த அஸ்வின்!
“வீட்டை விட்டு வெளியே வந்தால் இதுதான் நிலைமை” - நகைச்சுவையாக ட்விட் செய்த அஸ்வின்!
கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் ட்விட்டர் பெயரை மாற்றிய அஸ்வின்!
கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் ட்விட்டர் பெயரை மாற்றிய அஸ்வின்!
“இந்தியாவுக்கு அடுத்த இரண்டு வாரங்கள் மிக முக்கியமானதாக இருக்கும்” - அஸ்வின்!
“இந்தியாவுக்கு அடுத்த இரண்டு வாரங்கள் மிக முக்கியமானதாக இருக்கும்” - அஸ்வின்!
“மன்கட்டையும் சேர்த்துக்கோங்க” - அஸ்வின் பதிவிட்ட வித்தியாசமான கரிக்குலம் விட்டே!
“மன்கட்டையும் சேர்த்துக்கோங்க” - அஸ்வின் பதிவிட்ட வித்தியாசமான கரிக்குலம் விட்டே!
Advertisement