மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: ப்ரித்வி ஷா சதமடித்து சாதனை!

Updated: 04 October 2018 13:48 IST

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் ப்ரித்வி ஷா சதமடித்து சாதனை புரிந்துள்ளார்

India Vs West Indies 1st Test Day 1: Prithvi Shaw Hits Historic Ton As India Dominate Windies
அறிமுகப் போட்டியிலேயே ப்ரித்வி ஷா, சதமடித்தார் © Twitter

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் ப்ரித்வி ஷா சதமடித்து சாதனை புரிந்துள்ளார். 

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட நீண்டத் தொடரில் விளையாட உள்ளது. இன்று ராஜ்கோட்டில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது.

இந்தப் போட்டிக்கான டாஸை வென்ற இந்திய அணி, பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. லோகேஷ் ராகுல் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் இந்தியாவுக்காக முதல் இன்னிங்ஸை ஆட களமிறங்கினர். ப்ரித்வி ஷாவுக்கு இதுதான் அறிமுகப் போட்டியாகும். ராகுல், ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதையடுத்து புஜாரா மற்றும் ஷா கூட்டு சேர்ந்து மேற்கிந்தியத் தீவுகளின் பந்து வீச்சை, மைதானத்தின் நாலா பக்கமும் சிதறடித்தனர். 

இதனால், அறிமுகப் போட்டியிலேயே ஷா, சதமடித்து அசத்தினார். புஜாரா, அரை சதம் கடந்து தொடர்ந்து களத்தில் விளையாடி வருகிறார். ஷாவுக்கு தற்போது 18 வயது தான் ஆகிறது. இன்று சதமடித்ததன் மூலம், இந்திய அணி சார்பில் சதமடித்த மிக இளம் வீரர் என்ற சாதனையை ஷா புரிந்துள்ளார். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து மோதல்! #LiveUpdates
பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து மோதல்! #LiveUpdates
ஐபிஎல் 2019: ஒரு ரன்னில் கோப்பையை இழந்தது சென்னை #Highlights
ஐபிஎல் 2019: ஒரு ரன்னில் கோப்பையை இழந்தது சென்னை #Highlights
டெல்லியை வென்று IPL இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை!!
டெல்லியை வென்று IPL இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை!!
சி.எஸ்.கே.யுடன் மோதப் போவது யார்? - டெல்லி - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை!! #ScoreCard
சி.எஸ்.கே.யுடன் மோதப் போவது யார்? - டெல்லி - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை!! #ScoreCard
ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா ஐதராபாத்? - பெங்களூருவுடன் பலப்பரீட்சை!!
ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா ஐதராபாத்? - பெங்களூருவுடன் பலப்பரீட்சை!!
Advertisement
ss