பயிற்சி போட்டியில் காயம் : முதல் டெஸ்ட்டில் ஆடமாட்டார் ப்ரித்வி ஷா!

Updated: 30 November 2018 19:05 IST

இந்திய அணியின் துவக்க வீரரான ப்ரித்வி ஷா காயம் காரணமாக முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Prithvi Shaw Ruled Out Of The First Test Against Australia With Ligament Injury
பயிற்சி ஆட்டத்தில் மிட் விக்கெட் திசையில் நின்று கொண்டிருந்த ப்ரித்வி ஷா கேட்ச் பிடிக்க‌ முற்பட்ட போது முட்டுப்பகுதியில் காயம் ஏற்பட்டு வெளியேறினார். © AFP

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இந்திய அணியின் துவக்க வீரரான ப்ரித்வி ஷா காயம் காரணமாக முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிட்னியில் நடைபெற்று வரும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியுடனான  பயிற்சி ஆட்டத்தில் மிட் விக்கெட் திசையில் நின்று கொண்டிருந்த ப்ரித்வி ஷா கேட்ச் பிடிக்க‌ முற்பட்ட போது முட்டுப்பகுதியில் காயம் ஏற்பட்டு வெளியேறினார். 

முறையாக கீழே விழாமல் 90 டிகிரி வளைந்து விழுந்ததால் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. ''ப்ரித்வி ஷாவுக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. அதன் பின் அவருக்கு தசைநார் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ப்ரித்வி ஷா முதல் டெஸ்ட்டில் ஆடமாட்டார் என்றும் பிசிசிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஷா தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். காயம் ஏற்பட்டவுடன் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் '' ப்ரித்விஷாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது'' என ட்விட் செய்தது. இந்தப் போட்டியில் ஷா 69 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

இவருக்கு காயம் ஏற்பட்டதால், இந்தியாவின் துவக்க வீரர் யார் என்பது அணி நிர்வாகத்துக்கு பிரச்சனையாகியுள்ளது. முரளி விஜய் மற்றும் ராகுல் துவக்க வீரர்களாக களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

(With AFP inputs)

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இடம்பெற்ற பிருத்வி ஷா!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இடம்பெற்ற பிருத்வி ஷா!
முதல் ரஞ்சி டிராஃபி போட்டிக்கான மும்பை அணியில் அஜிங்க்யா ரஹானே, பிருத்வி ஷா
முதல் ரஞ்சி டிராஃபி போட்டிக்கான மும்பை அணியில் அஜிங்க்யா ரஹானே, பிருத்வி ஷா
"கோலி அல்லது காம்ப்லி?" - பிருத்வி ஷாவின் பேட்டில் இருக்கும் கையெழுத்து யாருடையது?
"கோலி அல்லது காம்ப்லி?" - பிருத்வி ஷாவின் பேட்டில் இருக்கும் கையெழுத்து யாருடையது?
"அதீத நம்பிக்கை பிரித்வி ஷாவுக்கு பிரச்னை" - ட்விட்டரில் பொங்கிய ரசிகர்கள்!
"அதீத நம்பிக்கை பிரித்வி ஷாவுக்கு பிரச்னை" - ட்விட்டரில் பொங்கிய ரசிகர்கள்!
4 ஆண்டுக்கு முன்பே ப்ரித்வி ஷாவை கணித்து ட்விட் செய்த ஜோசியக்காரர் ஜோஃப்ரா
4 ஆண்டுக்கு முன்பே ப்ரித்வி ஷாவை கணித்து ட்விட் செய்த ஜோசியக்காரர் ஜோஃப்ரா
Advertisement