காயத்திற்கு பிறகு ஐபிஎல்லுக்கு திரும்பும் ப்ரித்வி ஷா!

Updated: 21 January 2019 20:36 IST

ஆஸ்திரேலியாவில் பயிற்சி ஆட்டத்தில் கேட்ச் பிடிக்க முயன்ற போது காலில் காயம் ஏற்பட்டது.

Prithvi Shaw Gives Update On Fitness, Expects To Return In IPL 2019
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல் அணிக்காக ஆடவுள்ளார். © AFP

இந்திய அணியின் துவக்க வீரர் ப்ரித்வி ஷா காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலிருந்து விலகினார். கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்தார். அதனால் இந்திய அணி துவக்க வீரர் இடத்துக்கு மிகவும் தடுமாறியது. எப்படியோ சமாளித்து 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. 

கோலியும் ராகுல், விஜய் என துவக்க வீரர்களை மாற்றி பலனளிக்காமல் விஹாரி, அகர்வால் என ஆப்ஷன்களை மாற்றினார். தற்போது ப்ரித்வி ஷா ''இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்கு முன்பாக உடல்தகுதி பெற்றுவிடுவேன். அதற்கான சிகிச்சைகளை பெற்று வருகிறேன்" என்று கூறியுள்ளார்.

பயிற்சி ஆட்டத்தில் கேட்ச் பிடிக்க முயன்ற போது காலில் காயம் ஏற்பட்டது. அதற்கான சிகிச்சைகள் முடிந்து ஓய்வெடுத்து வரும் ப்ரித்வி ஷா, ஆஸ்திரேலியாவில் விளையாட அதிகம் விரும்பினேன். ஆனால் முடியாமல் போய்விட்டது என்று வருத்தம் தெரிவித்தார். 

அக்டோபரில் மேற்கிந்திய தீவுகளுடனான அறிமுக டெஸ்ட்டில் ச‌தமடித்தார். ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல் அணிக்காக ஆடவுள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஆஸ்திரேலியாவில் பயிற்சி ஆட்டத்தின்போது காலில் காயம் ஏற்பட்டது
  • அக்டோபரில் மேற்கிந்திய தீவுகளுடனான அறிமுக டெஸ்ட்டில் ச‌தமடித்தார்
  • ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல் அணிக்காக ஆடவுள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
4 ஆண்டுக்கு முன்பே ப்ரித்வி ஷாவை கணித்து ட்விட் செய்த ஜோசியக்காரர் ஜோஃப்ரா
4 ஆண்டுக்கு முன்பே ப்ரித்வி ஷாவை கணித்து ட்விட் செய்த ஜோசியக்காரர் ஜோஃப்ரா
"என் விதியை நான் ஏற்கிறேன்"  - தடைக்கு பின் பிரித்வி ஷா!
"என் விதியை நான் ஏற்கிறேன்" - தடைக்கு பின் பிரித்வி ஷா!
எலிமினேட்டர் சுற்றில் வெற்றி: "எல்லார் முகத்திலும் மகிழ்ச்சியை பார்க்கிறேன்" - ஷ்ரேயாஸ்
எலிமினேட்டர் சுற்றில் வெற்றி: "எல்லார் முகத்திலும் மகிழ்ச்சியை பார்க்கிறேன்" - ஷ்ரேயாஸ்
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட 11 வீரர்களை தக்கவைத்த மும்பை டி20 லீக்
ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட 11 வீரர்களை தக்கவைத்த மும்பை டி20 லீக்
Advertisement