#Preview கடைசி ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா?

Updated: 13 August 2019 18:00 IST

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்று முன்னிலையில் உள்ளது.

Shikhar Dhawan Under Pressure As India Eye ODI Series Triumph Over West Indies
ஷிகர் தவான் கடைசி ஒருநாள் போட்டியிலாவது சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. © AFP

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷிகர் தவானின் ஆட்டம் சற்று மோசமாகவே உள்ள நிலையில், கடைசி ஒருநாள் போட்டியிலாவது அவர் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே டி20 தொடரில் மூன்று போட்டிகளை வென்று, தொடரை கைப்பற்றியது இந்தியா. அதனால், ஒருநாள் தொடரில் இந்தியாவின் ஆதிக்கம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. நடந்து கொண்டிருக்கும் இந்திய சுற்றுப்பயணத்தில் ஷிகர் தவான் இதுவரை (டி20 மற்றும் ஒருநாள் போட்டி) ஒருமுறை தான் இரண்டு எண்கள் கொண்ட ரன்களை குவித்துள்ளார். அதனால், அனைவரும் அவர் கடைசி போட்டியிலாவது செயல்படவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தவான் இரண்டு முறை ஷெல்டன் காட்ரெலிடம் அவுட் ஆனார்.

டெஸ்ட் தொடரில் ஷிகர் தவான் இடம்பெறாததால், கடைசி ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்திய அணியில் 4வது இடத்தில் யார் ஆட வேண்டும் என்ற குழப்பம் அவ்வபோது வந்துக்கொண்டிருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த போட்டியில் சிறப்பாக ஆடியதான் பன்ட் மீது அழுத்தம் கூடியுள்ளது.

பன்ட்டுக்கு அணி நிர்வாகமும், முக்கியமாக விராட் கோலியும் பக்க பலமாக உள்ளனர். ஆனால், அவர் தொடர்ந்து மோசமாக விளையாடுவதும், ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக ஆடி, 68 பந்தில் 71 ரன்கள் எடுத்ததும் 4வது இடத்துக்கு கடும் போட்டியாக நிலவுகிறது.

சுனில் கவாஸ்கரும் நான்காவது இடத்தை ஸ்ரேயாஸுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். அவர் பன்ட்டை ஐந்தாவது இடத்தில் ஆட விட்டால், அணியில் கடைசி ஓவர்களின் அழுத்தத்தை அவர் சமாளிப்பார் என்று கூறினார். 

கோலி, இரண்டாவது ஒருநாள் போட்டியில் 125 பந்தில் 120 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.

தவான் மற்றும் ரோஹித் ஷர்மா இருவரும் சொற்ப ரன்களில் ஆவுட்டான பிறகு, ஸ்ரேயாஸுடன் இணைந்து சிறப்பாக ஆடினார்.

பந்துவீச்சாளர்களில் புவனேஷ்வர் குமார், இந்தியாவுக்கு பெரும் பலமாக உள்ளார். இரண்டாவது போட்டியில் அவர் 8 ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

மற்ற பந்துவீச்சாளர்களான முகமது ஷமி (2/39) மற்றும் குல்தீப் யாதர் (2/59) ஆகியோரும் விக்கெட்கள் வீழ்த்த உதவினர்.

அணி விவரம்:

இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுவேந்திர சஹால்,  கேதர் ஜாதவ்,  முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி.

மேற்கிந்திய தீவுகள்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிறிஸ் கெயில், ஜான் கேம்பெல், ஈவின் லீவிஸ், ஷாய் ஹோப், சிம்ரன் ஹெட்மெயர், நிக்கோலஸ் பூரான் (விக்கெட் கீப்பர்), ரோஸ்டன் சேஸ், ஃபேபியன் ஆலன், கார்லஸ் பிராத்வெயிட், கீமோ பால், ஷெல்டன் காட்ரெல், ஒஷானே தாமஸ், கேமர் ரோச்.

போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது
  • கடைசி போட்டியில் தவானுக்கு அழுத்தம் கூடியுள்ளது
  • பன்ட்டுக்கு அணி நிர்வாகம் பக்கபலமாக உள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
“ஏன் இவ்ளோ கியூட்டா இருக்கீங்க...” - மனதை கவரும் தவான் பதிவிட்ட புகைப்படம்!
“ஏன் இவ்ளோ கியூட்டா இருக்கீங்க...” - மனதை கவரும் தவான் பதிவிட்ட புகைப்படம்!
“12வது இடத்தில் ஆடினாலும் சதமடிப்பார்” - ராகுலை புகழ்ந்த ஷிகர் தவான்!
“12வது இடத்தில் ஆடினாலும் சதமடிப்பார்” - ராகுலை புகழ்ந்த ஷிகர் தவான்!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இடம்பெற்ற பிருத்வி ஷா!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இடம்பெற்ற பிருத்வி ஷா!
காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியிலிருந்து தவான் விலகல்!
காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியிலிருந்து தவான் விலகல்!
India vs Sri Lanka, 3rd T20I: தொடரை கைப்பற்றுமா இந்தியா!
India vs Sri Lanka, 3rd T20I: தொடரை கைப்பற்றுமா இந்தியா!
Advertisement