"ஜாண்டி ரோட்ஸ் ஏன் தேர்வு செய்யப்படவில்லை" - விளக்கமளித்த எம்.எஸ்.கே.பிரசாத்!

Updated: 23 August 2019 17:34 IST

ஆர் ஶ்ரீதருடன் தேர்வுக் குழு விக்ரம் ராத்தோரை பேட்டிங் பயிற்சியாளராகவும், பரத் அருணை பவுலிங் பயிற்சியாளராகவும் நியமித்துள்ளது.

MSK Prasad Reveals Why Jonty Rhodes Was Overlooked For Fielding Coach Role
இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு ஜாண்டி ரோட்ஸ் கருதப்படவில்லை. © AFP

எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழு வியாழக்கிழமை ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு மூன்று சிறந்த வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளதால், இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு ஜாண்டி ரோட்ஸ் கருதப்படவில்லை. அறிவிப்புக்கு பின்னர், பிசிசிஐ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், எம்.எஸ்.கே தற்போதைய ஃபீல்டிங் பயிற்சியாளரை பாராட்டியுள்ளார். உலகத்திலேயே சிறந்த ஃபீல்டிங் பயிற்சியாலர் ஆர்.ஶ்ரீதர் தான் என்றார். இந்த பதவியில் ஆர்.ஶ்ரீதர் தொடர நினைத்துள்ளார். அவருடன், தேர்வுக் குழு விக்ரம் ராத்தோரை பேட்டிங் பயிற்சியாளராகவும், பரத் அருணை பவுலிங் பயிற்சியாளராகவும் நியமித்துள்ளது.

"உலகத்திலேயே சிறந்த ஃபீல்டிங் பயிற்சியாலர் ஆர்.ஶ்ரீதர் தான். உலகக் கோப்பையில், நம் அணியில் மூன்று விக்கெட் கீப்பர்களை கொண்டிருந்தோம். அவர் பீல்டிங் யூனிட்டை மாற்றினார், அதனால் இரண்டாவது யோசனை இல்லாமல் செயல்பட முடிந்தது," என்று செய்தியாளர் சந்திப்பில் பிரசாத் கூறினார்.

"ஜாண்டி அங்கு பொருத்தமாக இருப்பதை நாங்கள் காணவில்லை, ஏனெனில் அந்த இடங்கள் இந்தியா ஏ நிலைகள் மற்றும் என்சிஏவுக்கு மட்டுமே அதிகம்" என்றார் அவர்.

இந்தப் பதவிக்கு ரோட்ஸ் விண்ணப்பித்தது மிக பெரிய விஷயம்.  ஆனால், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் ஶ்ரீதர் தொடர வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தார்.

பீல்டிங் பயிற்சியாளருக்கான முதல் மூன்று தேர்வுகளில் ரோட்ஸ் பெயர் இல்லை, அபய் ஷர்மா மற்றும் டி. திலீப் ஆகியோர் ஸ்ரீதருடன் குறுகிய பட்டியலிடப்பட்ட மற்ற இரண்டு பெயர்களாக இருந்தது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு உலகக் கோப்பைக்கு பிறகு 45 நாட்கள் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. கடந்த வாரம் சிஏசி ரவி சாஸ்திரியை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தது. சிஏசி குழுவில் கபில் தேவ், அன்சுமா கேக்வாட் மற்றும் சாந்தா ரங்கசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாட ஜாண்டி ரோட்ஸை அழைத்த ஹர்பஜன் சிங்!
தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாட ஜாண்டி ரோட்ஸை அழைத்த ஹர்பஜன் சிங்!
கிரிக்கெட் களத்தில் மீண்டும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாரா!
கிரிக்கெட் களத்தில் மீண்டும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாரா!
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
"ஜாண்டி ரோட்ஸ் ஏன் தேர்வு செய்யப்படவில்லை" - விளக்கமளித்த எம்.எஸ்.கே.பிரசாத்!
"ஜாண்டி ரோட்ஸ் ஏன் தேர்வு செய்யப்படவில்லை" - விளக்கமளித்த எம்.எஸ்.கே.பிரசாத்!
"உடல் சொல்வதை கேளுங்கள்" - ரெய்னாவுக்கு அறிவுரை சொன்ன ஜாண்டி ரோட்ஸ்!
"உடல் சொல்வதை கேளுங்கள்" - ரெய்னாவுக்கு அறிவுரை சொன்ன ஜாண்டி ரோட்ஸ்!
Advertisement