Listen to the latest songs, only on JioSaavn.com
 

அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் பிரக்யான் ஓஜா!

Updated: 21 February 2020 18:00 IST

33 வயதான பிரக்யான் ஓஜா, 24 டெஸ்ட், 18 ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் அவர் முறையே 113, 21 மற்றும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Pragyan Ojha Announces Retirement From International Cricket
பிரக்யான் ஓஜா அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். © AFP

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் ஓய்வு முடிவை ஓஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். “ஒரு இந்திய கிரிக்கெட் வீரராக இருந்து நாட்டை மிக உயர்ந்த மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவது எப்போதுமே இளைஞனாக நான் போற்றும் ஒரு கனவுதான்” என்று ஓஜா ஒரு அறிக்கையில் கூறினார். இது கடந்து செல்ல வேண்டிய நேரம் என்று அவர் மேலும் கூறினார்.

“என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை பல ஏற்ற தாழ்வுகளை கண்டுள்ளது. ஒரு விளையாட்டு வீரரின் மரபு அவரது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் விளைவு மட்டுமல்ல. ஆனால் குழு (குழு மேலாண்மை), குழு உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ரசிகர்களால் வழங்கப்பட்ட நம்பிக்கை மற்றும் வழிகாட்டுதல் என்பதை காலப்போக்கில்  நான் உணர்ந்தேன்”.

33 வயதான அவர் 24 டெஸ்ட், 18 ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் அவர் முறையே 113, 21 மற்றும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அவர் கடைசியாக 2018ம் ஆண்டு நவம்பர் மாதம், பீகாரில் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடினார்.

இந்தியாவுக்காக தனது கடைசி ஆட்டமான, 2013ம் ஆண்டில் மும்பையின் வான்கடேயில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்த்து இந்தியாவின் இன்னிங்ஸ் வெற்றியின் போது, மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இது சச்சின் டெண்டுல்கரின் கடைசி டெஸ்டாகவும் இருந்தது.

“எனக்கு மூத்த சகோதரரை போல வழிகாட்டியாக இருந்த விவிஎஸ் லஷ்மனுக்கு, எனக்கு முன்னோடியாக இருந்த வெங்கடபதி ராஜு, எனக்கு தொடர்ச்சியாக அறிவுரை கூறிய ஹர்பஜன் சிங் மற்றும் என்னை இந்திய கேப் அணிய உதவிய எம் எஸ் தோனி ஆகியோருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், என்றார் ஓஜா.

இடது கை சுழற்பந்து வீச்சாளர், ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 92 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெக்கன் சார்ஷர்ஸ் அணிக்காக 2009ம் ஆண்டு ஆடத் தொடங்கினார். பின்னர் மும்பை அணிக்கு மாற்றப்பட்டார். அவர் ஐபிஎல் போட்டியில் கடைசியாக 2015ம் ஆண்டு இடம்பெற்றார். மொத்தமாக ஐபிஎல்லில் 89 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
நிவாரண நிதித் தொகை குறித்து கேள்விகள் எழுப்புவோரைக் கடுமையாகச் சாடும் பிரக்யான் ஓஜா!
நிவாரண நிதித் தொகை குறித்து கேள்விகள் எழுப்புவோரைக் கடுமையாகச் சாடும் பிரக்யான் ஓஜா!
“பவுலர்களின் கேப்டன்” - தோனியின் கேப்டன்ஸியை பாராட்டிய பிரக்யான் ஓஜா
“பவுலர்களின் கேப்டன்” - தோனியின் கேப்டன்ஸியை பாராட்டிய பிரக்யான் ஓஜா
அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் பிரக்யான் ஓஜா!
அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் பிரக்யான் ஓஜா!
ராயுடுவின் கிண்டல் ட்விட்டின் மர்மம் நீக்கிய ப்ரக்யான் ஓஜா!
ராயுடுவின் கிண்டல் ட்விட்டின் மர்மம் நீக்கிய ப்ரக்யான் ஓஜா!
Advertisement