விராட் கோலியின் ஆக்ரோஷத்துக்கு ஆதரவு தரும் அக்தர்!

Updated: 21 December 2018 20:35 IST

"கோலியின் ஆக்ரோஷத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று சோயப் அக்தர் கூறியுள்ளார்.

Shoaib Akhtar Defends Virat Kohli, Wants Critics To "Cut Him Some Slack"
வரும் டிசம்பர் 26ம் தேதி மூன்றாவது டெஸ்ட் மெல்பெர்னில் துவங்கவுள்ளது. © File Photo/AFP

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் விராட் கோலியின் ஸ்லெட்ஜிங் பாராட்டுகளையும், விமர்சனங்களையும் பெற்றது. முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் தனது ட்விட்டில் "கோலியின் ஆக்ரோஷத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.

மேலும், "விராட் கோலி நவீன கால கிரிக்கெட்டின் லெஜெண்ட். அவரது ஆக்ரோஷம் என்பது போட்டியின் ஒரு அங்கம்தான். எல்லை மீறாமல் இருக்கும் வரை ஆக்ரோஷத்தை அனுமதிக்கலாம்" என்று கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

விராட் கோலியின் கள ஆக்ரோஷத்தை பாலிவுட் நடிகர் நஸ்ரூதின் ஷா "கோலி ஒரு மோசமான வீரர்" என்று விமர்சித்தார்.

ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜான்ஸன் "கோலி மரியாதைக்கு குறைவான செயல்களில் ஈடுபடுகிறார். போட்டி முடிந்ததும் பெய்னிடம் கைகுலுக்கக்கூட இல்லை" என்று சாடியுள்ளார்.

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுடனான வாக்குவாதம் பற்றி இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர்கான் கூறும் போது "விராட்டின் கள ஆக்ரோஷம்தான் அவருக்கு வெற்றியை தருகிறது. நீங்கள் விராட்டை பற்றி பேசினால் அவரது போராட்ட குணத்தை பற்றி பேச வேண்டும். அதேபோல அவரது ஸ்லெட்ஜிங் பற்றி பேசினால் அவரது வெற்றிகள் பற்றியும் பேச வேண்டும்'' என்று கூறினார்.

வரும் டிசம்பர் 26ம் தேதி மூன்றாவது டெஸ்ட் மெல்பெர்னில் துவங்கவுள்ளது. இந்தத் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"போட்டியை முடிக்கும் கலையை ரோஹித் மற்றும் கோலியிடம் கற்றுக்கொண்டேன்" - ஸ்ரேயாஸ்
"போட்டியை முடிக்கும் கலையை ரோஹித் மற்றும் கோலியிடம் கற்றுக்கொண்டேன்" - ஸ்ரேயாஸ்
முதல் டி20 போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
முதல் டி20 போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
உள்நாட்டு தொடர் வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை தொடங்கியது இந்தியா!
உள்நாட்டு தொடர் வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை தொடங்கியது இந்தியா!
உடற்பயிற்சிக்கு பிறகு "நல்ல உணவு" உண்டு மகிழ்ந்த இந்திய அணி வீரர்கள்!
உடற்பயிற்சிக்கு பிறகு "நல்ல உணவு" உண்டு மகிழ்ந்த இந்திய அணி வீரர்கள்!
Advertisement