
அமெரிக்க ராப் பாடகர் பிட்புல் துபாயில் நடந்த நான்காவது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் துவக்க விழாவில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டிருந்தது. கிராமி விருது வென்ற பிட்புல் கடைசி நிமிடத்தில் விமானத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக துவக்க விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது. இதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார் பிட்புல்.
அந்த பதிவில் " நான் துபாயில் நடக்கும் சூப்பர் லீக்கின் துவக்க விழாவில் கலந்து கொண்டு பர்ஃபார்ம் செய்ய ஆவலாக இருந்தேன். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கலந்து கொள்ள முடியாமல் போனது. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
இதனிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இவரை விரைவாக துபாய் வரவழைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தது. அவையும் பலனளிக்கவில்லை. அதனால் பிட்புல் கிரிக்கெட் வாரியத்துக்கும், ரசிகர்களுக்கும் தனது மன்னிப்பையும், ஆதரவுக்கு நன்றியையும் தெரிவித்தார்.
"அடுத்த வருடம் கண்டிப்பாக முன்கூட்டியே இங்கு வர முயற்சிப்பேன்" என்று கூறினார் பிட்புல்.
Apologies to @Thepslt20 and Dubai pic.twitter.com/CtYn11w1wT
— Pitbull (@pitbull) February 13, 2019
மர்ஷியா பாரெட், அய்மா பைக், ஷுஜா ஹைதர், பவாத் கான் உள்ளிட்ட பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
நான்காவது பாகிஸ்தான் ப்ரீமியர் லீக் பிப்ரவரி 14 துவங்கி மார்ச் 17 வரை நடக்கிறது.
நடப்பு சாம்பியன் இஸ்லாமாபாத் யுனைடெட், லாகூர் க்யூலாண்டர்ஸ் அணியை துவக்க ஆட்டத்தில் சந்தித்தது.