சின்னசாமி மைதானத்திலும் அகற்றப்படும் பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படம்

Updated: 20 February 2019 15:34 IST

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பெங்களூரு சின்னசாமி மைதனாத்திலிருந்து பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளன

Pulwama Attack: Photos Of Imran Khan, Other Pakistani Cricketers Removed From Chinnaswamy Stadium
இம்ரான் கான் புகைப்படம் உட்பட மற்ற பாகிஸ்தான் வீரரகளின் புகைப்படங்களும் நீக்கப்பட்டுள்ளன.  © AFP

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பெங்களூரு சின்னசாமி மைதனாத்திலிருந்து பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளன.  இறந்த ராணுவ வீரர்களுக்கு செலுத்தும் மரியாதையை தாங்கள் இதனை செய்துள்ளதாக சின்னசாமி மைதானத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் முன்னாள் வீரரும், தற்போதைய பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கான் புகைப்படம் உட்பட மற்ற பாகிஸ்தான் வீரரகளின் புகைப்படங்களும் நீக்கப்பட்டுள்ளன. 

முன்னதாக 'கிரிக்கெட் க்ளப் ஆஃப் இந்தியா' பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படத்தை அகற்றியது. அடுத்து புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பஞ்சாப், ராஜஸ்தான், ஹிமாச்சல் கிரிக்கெட் சங்கங்கள் மைதானத்திலிருந்து பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படங்களை நீக்கியுள்ளன. 

தரம்சாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேச கிரிக்கெட் வாரியத்துக்கு சொந்தமான மைதானத்திலிருந்து 13 பாகிஸ்தான் வீரர்கள் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளது. இங்கு 2005ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே பயிற்சி ஆட்டத்தில் மோதியது. இதில் பாகிஸ்தான் மற்றும் இந்திய வாரிய தலைவர் அணிகள் மோதின. பாகிஸ்தான் இந்தியா பயிற்சி போட்டியில் உள்ள புகைப்படங்களும் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்ரீநகர் ஜம்மு நெடுங்சாலையில் 78 பேருந்துகளில் 2500க்கும் அதிகமான மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது 350 கிலோ வெடி பொருள்கள் நிரம்பிய கார் தாக்கி 40க்கும் அதிகமான வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் - இ - முகமது இயக்கம் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • சின்னசாமி மைதனாத்திலிருந்து இம்ரான் கான் புகைப்படம் நீக்கப்பட்டது
  • பிப்ரவரி 19ம் தேதி புகைப்படங்கள் நீக்கப்பட்டன
  • தீவிரவாதிகள் தாக்குதலில் 40க்கும் அதிகமான வீரர்கள் உயிரிழந்தனர்
தொடர்புடைய கட்டுரைகள்
“தீவிரவாதிகளின் மையமாக செயல்பட்ற நாடு உங்களது…”- Pak பிரதமரை வறுத்தெடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்!
“தீவிரவாதிகளின் மையமாக செயல்பட்ற நாடு உங்களது…”- Pak பிரதமரை வறுத்தெடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்!
ஐ.நாவில் பேசிய இம்ரான் கானை வறுத்தெடுக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
ஐ.நாவில் பேசிய இம்ரான் கானை வறுத்தெடுக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
அடுத்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பெஸ்ட் அணியாக இருக்கும் : இம்ரான் கான்
''அடுத்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பெஸ்ட் அணியாக இருக்கும்'' : இம்ரான் கான்
சின்னசாமி மைதானத்திலும் அகற்றப்படும் பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படம்
சின்னசாமி மைதானத்திலும் அகற்றப்படும் பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படம்
சூப்பர் லீக்கிலிருந்து வெளியேறிய ரிலையன்ஸுக்கு பாகிஸ்தான் வாரியம் பதில்!
சூப்பர் லீக்கிலிருந்து வெளியேறிய ரிலையன்ஸுக்கு பாகிஸ்தான் வாரியம் பதில்!
Advertisement