நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 3-0 என தொடரை கைப்பற்றியது இந்தியா

நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா. மூன்றாவது போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க மண்ணில் 5-1 என்ற கணக்கில் வென்றது. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2-1 என்ற கணக்கில் வென்றது. 2009ல் இந்தியா நியூசிலாந்து அணியை நியூசிலாந்தில் 3-1 என்ற கணக்கில் வென்றது.