"பன்ட்டிடம் நாம் பொறுமையாக இருக்க வேண்டும்" - தேர்வுக்குழு தலைவர் பிரசாத்

Updated: 21 September 2019 16:14 IST

ரிஷப் பன்ட்டின் பணிச்சுமையை குறைக்க இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் மற்றும் ஒரு சிலரை காப்பு விக்கெட் கீப்பர்களாக தேர்வுக்குழு கண்காணித்து வருவதாக எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார்.

Rishabh Pant Possesses Immense Talent, Says Team India Chief Selector MSK Prasad
இரண்டாவது டி20 போட்டியில் ரிஷப் பன்ட் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். © AFP

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், 150 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் ரிஷப் பன்ட் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். ஆனால், போட்டியை வெற்றியில் முடிக்க விராட் கோலியின் ரன்கள் உதவியது. அதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டியிலும் ரிஷப் பன்ட் மூன்று இன்னிங்ஸில் ஆடி 27, 24 மற்றும் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும், ரிஷப் பன்ட் போன்ற திறமையான ஒருவரிடம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் நம்புகிறார்.

மேலும், ரிஷப் பன்ட்டின் பணிச்சுமையை குறைக்க இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் மற்றும் ஒரு சிலரை காப்பு விக்கெட் கீப்பர்களாக தேர்வுக்குழு கண்காணித்து வருவதாக எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார்.

"உலகக் கோப்பைக்குப் பிறகு நாங்கள் பன்ட்டின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி வருகிறோம் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். அவரிடம் இருக்கும் அபரிமிதமான திறமையைக் கருத்தில் கொண்டு, நாம் பொறுமையாக இருக்க வேண்டும்," என்று பிரசாத் கூறினார்.

"ரிஷப் பன்ட்டின் பணிச்சுமையை கண்காணித்து வருகிறோம். அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் மாற்று வீரர்களை தயாரித்து வருகிறோம். இந்தியா 'ஏ' அணியில் நீண்ட வடிவத்தில் இளம் வீரர் கே.எஸ்.பாரத் சிறப்பாக செயல்படுகிறார். குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கு இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் உள்ளனர்," என்று தேர்வுக்குழு தலைவர் கூறினார்.

தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணியில் பரத் இடம் பெற்றார். தென்னாப்பிரிக்கா ஏ உடனான அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
சாஹாவின் சிறப்பான விக்கெட் கீப்பிங்... பன்ட்டை காலாய்த்த ரசிகர்கள்!
சாஹாவின் சிறப்பான விக்கெட் கீப்பிங்... பன்ட்டை காலாய்த்த ரசிகர்கள்!
"நான் இங்கு தபேலா வாசிக்கவா இருக்கேன்?" - பன்ட் பிரச்னை குறித்து ரவி சாஸ்திரி!
"நான் இங்கு தபேலா வாசிக்கவா இருக்கேன்?" - பன்ட் பிரச்னை குறித்து ரவி சாஸ்திரி!
பன்ட்டை ஆதரித்த யுவராஜ் சிங்... அவருக்கு பதிலளித்த ஆஸி. வீரர் டீன் ஜோன்ஸ்
பன்ட்டை ஆதரித்த யுவராஜ் சிங்... அவருக்கு பதிலளித்த ஆஸி. வீரர் டீன் ஜோன்ஸ்
"ரிஷப் பன்ட் குறித்து மீடியாவில் கருத்து சொல்வதை நிறுத்துங்கள்" - யுவராஜ் சிங்!
"ரிஷப் பன்ட் குறித்து மீடியாவில் கருத்து சொல்வதை நிறுத்துங்கள்" - யுவராஜ் சிங்!
"4வது இடத்தில் யார் ஆட வேண்டும்?" - அமிதாப் பச்சனைப் போல் கேட்ட கவாஸ்கர்!
"4வது இடத்தில் யார் ஆட வேண்டும்?" - அமிதாப் பச்சனைப் போல் கேட்ட கவாஸ்கர்!
Advertisement