"கிரிக்கெட்டில் ஒழுக்கத்தை கொண்டு வர வேண்டும் பன்ட்" - விக்ரம் ராத்தோர்!

Updated: 18 September 2019 19:16 IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் தேர்வாக இருக்கும் ரிஷப் பன்ட், பொறுப்பற்ற ஷாட்களை விளையாடி, அவுட் ஆவதால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறார்.

Rishabh Pant Needs To Bring "Little Discipline In To His Cricket", Says Batting Coach Vikram Rathour
தர்மசாலாவில் நடக்கவிருந்த முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. © AFP

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் தேர்வாக இருக்கும் ரிஷப் பன்ட், பொறுப்பற்ற ஷாட்களை விளையாடி, அவுட் ஆவதால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறார். "இப்போது நாங்கள் அவரை விட்டுவிட்டோம், இதேபோன்று இன்னொரு முறை பந்து தேர்வு செய்தார், முதல் பந்தில் ஆட்டமிழந்தால் அவருக்கு எடுத்து சொல்லப்படும். திறமை இருக்கிறதோ இல்லையோ, அவரின் ஆட்டத்துக்கு எதிர்வினை இருக்கும்," என்றார் ரவி சாஸ்திரி. பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோரும் அதையே தான் கூறியுள்ளார். சஞ்சய் பங்கருக்கு பதிலாக பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரத்தோர், பன்ட்டின் தாக்குதல் மனநிலையைப் பாராட்டினார். ஆனால் "பன்ட் கிரிக்கெட்டில் ஒரு சிறிய ஒழுக்கத்தைக் கொண்டு வர வேண்டும்" என்றும் அறிவுறுத்தினார்.

"அவர் (பன்ட்) பயமின்றி இருக்க வேண்டும், ஏனென்றால் அதுவே அவரை சிறப்பானவராக வைத்திருக்கிறது. அவர் ஒரு தாக்கம் ஏற்படுத்துக்கூடிய வீரர், ஆனால் அதே நேரத்தில் அவர் கவனக்குறைவாக இருக்க முடியாது," என்று ராத்தோர் இரண்டாவது டி20க்கு முன்பாக பேசினார்.

"அவர் ஒரு தனித்துவமான வீரர். ஆனால், அவர் தனது கிரிக்கெட்டில் ஒரு சிறிய ஒழுக்கத்தைக் கொண்டு வர வேண்டும்.

"அச்சமற்ற மற்றும் கவனக்குறைவான கிரிக்கெட்டுக்கு இடையே ஒரு சிறிய கோடு மட்டுமே இருப்பதை அனைத்து இளம் வீரர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

"இருப்பினும், அவர் அனைத்து ஷாட்டுகளையும் விளையாட வேண்டும்," என்றார் அவர்.

இந்த ஆண்டு 50 ஓவர்கள் உலகக் கோப்பையில்  நியூசிலாந்திடம் தோல்வியடைந்த பின்னர், இந்தியா டி20 போட்டிகளில் கவனம் செலுத்தியது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், தர்மசாலாவில் நடக்கவிருந்த முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

"இதற்கு முன்பு டி20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்தவில்லை. இப்போது உலகக் கோப்பைக்குத் தயாராகி வருவதால், இந்த விளையாட்டுகள் அனைத்தும் மிக முக்கியமானதாக இருக்கும்," என்று முன்னாள் தொடக்க வீரர் ராத்தோர் கூறினார்.

"அடுத்த 20-21 ஆட்டங்களில் நாம் விளையாடவிருப்பது உலகக் கோப்பைக்கான தயாரிப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்."

உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ரிஷப் பன்ட்டை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விராட் கோலி!
ரிஷப் பன்ட்டை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விராட் கோலி!
சையத் முஷ்டாக் அலி டிராஃபியில் இணைந்தார் பன்ட்... இந்திய அணியில் கே.எஸ்.பரத்!
சையத் முஷ்டாக் அலி டிராஃபியில் இணைந்தார் பன்ட்... இந்திய அணியில் கே.எஸ்.பரத்!
"பன்ட்டை விட சிறப்பாக விளையாடுகிறீர்கள்" - இடது கை பேட்டிங் செய்த அஸ்வின்!
"பன்ட்டை விட சிறப்பாக விளையாடுகிறீர்கள்" - இடது கை பேட்டிங் செய்த அஸ்வின்!
"பன்ட்டுக்கு, ஸ்டம்புக்கு பின்னால் தெளிவும் நேர்த்தியும் தேவை" குமார் சங்கக்காரா
"பன்ட்டுக்கு, ஸ்டம்புக்கு பின்னால் தெளிவும் நேர்த்தியும் தேவை" குமார் சங்கக்காரா
ரிஷப் பன்ட்டின் விக்கெட் கீப்பிங்கை விமர்சித்து ரசிகர்கள் பதிவிட்ட மீம்ஸ்!
ரிஷப் பன்ட்டின் விக்கெட் கீப்பிங்கை விமர்சித்து ரசிகர்கள் பதிவிட்ட மீம்ஸ்!
Advertisement