டி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்!

Updated: 07 August 2019 13:52 IST

மூன்றாவது டி20 போட்டியில் ரிஷப் பன்ட் 42 பந்தில் 65 ரன்கள் எடுத்து, இந்திய விக்கெட் கீப்பர்களில் டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Rishabh Pant Breaks MS Dhonis Record With Match-Winning Knock Against West Indies
பன்ட், பவுலரின் தலைக்கு மேல் பந்தை சிகஸ்ருக்கு பறக்கவிட்டு வெற்றியை சொந்தமாக்கினார். © AFP

விராட் கோலி மற்றும் ரிஷப் பன்ட் இருவரின் அரைசதங்கள் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது. மூன்று டி20 போட்டிகளில் மூன்றையும் இந்திய அணி வென்றது. மூன்றாவது டி20 போட்டியில் ரிஷப் பன்ட் 42 பந்தில் 65 ரன்கள் எடுத்து, இந்திய விக்கெட் கீப்பர்களில் டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 2017ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், 56 ரன்கள் எடுத்திருந்தார். அந்தச் சாதனையை பன்ட் இப்போது முறியடித்துள்ளார்.

 146/6 என்ற மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. இந்தப் போட்டியில் அதிக ரன்கள் குவித்த ரிஷப் பன்ட் மற்றும் கோலி (59) ஆகிய இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த போட்டியை வெற்றி பெற்றதௌ அடுத்து, இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியுள்ளது. மேற்கிந்திய தீவுகள் தொடர்ந்து ஆறாவது முறையாக டி20 போட்டியில் தோற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சாளர்கள் ஓஷானே தாமஸ் மற்றும் ஃபேபியன் ஆலன் ஆகிய இருவரும் 5வது ஓவரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களை அவுட் ஆக்கினர்.

ஆனால், பன்ட் கோலியுடன் இணைந்து அணியின்தேவையை உணர்ந்து செயல்பட்டார். விராட் கோலி அவுட் ஆவதற்கு முன்பாக இருவரும் சேர்ந்து 106 ரன்கள் பார்னர்ஷிப் அமைத்தனர்.

பன்ட், பவுலரின் தலைக்கு மேல் பந்தை சிகஸ்ருக்கு பறக்கவிட்டு வெற்றியை சொந்தமாக்கினார். கடைசி ஓவரில் 5 பந்துகள் மீதமிருக்கையில் இந்திய அணி 150/3 என்று போட்டியில் வெற்றி பெற்றது.

"நிச்சயமாக ரிஷப் பன்ட்டை நாங்கள் எதிர்காலமாக பார்க்கிறோம். அவருக்கு அதிகபடியான திறமை உள்ளது. ஆட்டத்தை சிறப்பாக ஆடி முடிக்கக் கூடியவராக உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயம்," போட்டிக்கு பிறகு கோலி கூறினார்.

"விளையாட தொடங்கியது முதல் அவர் நெடுந்தூரம் வந்துள்ளார். அவர் தொடர்ந்து இது போன்று ஆடினால், இந்தியாவுக்கு தேவையாக முக்கிய வீரராக பார்க்கப்படுவார்," என்றார் கோலி.

"ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இதே போன்று விளையாட வேண்டும் என்று இருக்கிறோம். ஆட்டத்தில் முடிவில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறோம். மேற்கிந்திய தீவுகளின் ஒருநாள் போட்டிக்கான அணி இன்னும் பலம் வாய்ந்ததாக உள்ளது. நாங்கள் இன்னும் கடினமாக செயல்படுவோம். அணியாக இந்த ஒரு மாதம் போட்டியை ஆட உள்ளோம்," என்றார் கோலி.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
New Zealand vs India: முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை!
New Zealand vs India: முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை!
யுஸ்வேந்திர சாஹலின் டிக்டாக் வீடியோவில் இருக்கும் வீரர் யார்?
யுஸ்வேந்திர சாஹலின் டிக்டாக் வீடியோவில் இருக்கும் வீரர் யார்?
"நாங்கள் தோனியை மிகவும் மிஸ் செய்கிறோம்" - வீடியோவில் உணர்ச்சிவசப்பட்ட சாஹல்!
"நாங்கள் தோனியை மிகவும் மிஸ் செய்கிறோம்" - வீடியோவில் உணர்ச்சிவசப்பட்ட சாஹல்!
பன்டர் என்ற புனைப்பெயர் எப்படி வந்தது... வெளிப்படுத்திய ரிக்கி பாண்டிங்!
'பன்டர்' என்ற புனைப்பெயர் எப்படி வந்தது... வெளிப்படுத்திய ரிக்கி பாண்டிங்!
கே.எல். ராகுலின் சிறப்பான ஸ்டம்பிங் பிறகு பன்ட்டை கலாய்த்த ரசிகர்கள்!
கே.எல். ராகுலின் சிறப்பான ஸ்டம்பிங் பிறகு பன்ட்டை கலாய்த்த ரசிகர்கள்!
Advertisement