சர்ச்சை எதிரொலி: பாண்ட்யா மற்றும் ராகுல் முதல் ஒருநாள் போட்டியிலிருந்து நீக்கம்!

Updated: 11 January 2019 20:11 IST

ஹர்திக் பாண்ட்யா மற்றும் ராகுல் பெண்கள் குறித்து தவறாக பேசியதற்காக, 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்குமாறு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியது.

Hardik Pandya, KL Rahul Dropped From 1st ODI Against Australia: Sources
Hardik Pandya & KL Rahul: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான அணியிலிருந்து இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். © Twitter

ஹர்திக் பாண்ட்யா மற்றும் கேல்.எல்.ராகுல் பெண்கள் குறித்த சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்த விஷயத்தில் விசாரணை நடந்து வருவதால் முதல் ஒருநாள் போட்டிக்கான அணியிலிருந்து இருவரும் நீக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக பிசிசிஐயின் நிர்வாக குழு இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். டிவி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்த கருத்துக்களை முன் வைத்ததற்காக மன்னிப்பு கேட்க சொல்லி விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கருத்துகளுக்காக இருவரிடமும் 24 மணி நேரத்துக்குள் விளக்கம் கேட்டு பிசிசிஐ எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 

அதற்கு பதிலளித்துள்ள ஹர்திக் பாண்ட்யா '' நான் அந்த நிகழ்ச்சியில் பேசியது தவறு தான். என்னை அறியாமல் அந்த கருத்துக்களை முன்வைத்தேன். அதற்கு வருத்தம் தெரிவிப்பதோடு மட்டுமின்றி மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் "இந்த விளக்கத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை" என்று நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார். இதனால் இரு வீரர்களுக்கு இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆட தடை விதிக்க பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் எதுல்ஜியின் முடிவும் வந்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

டையனா எதுல்ஜியும் இதே கருத்தை முன் வைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால் இவர்களுக்கு இரு போட்டிகளில் ஆட தடை விதிக்கபடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இருவரும் முதல் ஒருநாள் போட்டிக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
''அணிக்கு பாண்ட்யாவின் தேவை அதிகம்'' - தவான் ஆதரவு
''வெளியே செல்லவில்லை... போனை எடுக்கவில்லை'' வருத்ததில் வீட்டில் முடங்கிய பாண்ட்யா!
ஆஸி.க்கு எதிரான தொடரில் விளையாட தமிழக வீரர் விஜய் சங்கருக்கு அழைப்பு
ஆஸி.க்கு எதிரான தொடரில் விளையாட தமிழக வீரர் விஜய் சங்கருக்கு அழைப்பு
டிவி ஷோ சர்ச்சை : ராகுல், பாண்ட்யா சஸ்பெண்ட் பிசிசிஐ அதிரடி முடிவு
டிவி ஷோ சர்ச்சை : ராகுல், பாண்ட்யா சஸ்பெண்ட் பிசிசிஐ அதிரடி முடிவு
''என் குடும்பம் இவர்கள் இருக்குமிடத்தில் இருக்காது'' - பாண்ட்யா பற்றி ஹர்பஜன்!
Advertisement