Imam-Ul-Haq, Opening Partnership Record, Highest Opening partnership in ODIs, ODI partnership
 

முதல் விக்கெட்டிற்கு 304 ரன்கள் குவித்து, பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் சாதனை!

Updated: 20 July 2018 18:05 IST

முதல் விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபக்ஹர் ஸமான், இமாம்-உல்-ஹக் ஆகியோர் இணைந்து 304 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளனர்

Pakistan vs Zimbabwe: Fakhar Zaman, Imam-Ul-Haq Break All-Time ODI Opening Partnership Record
Pakistan's Fakhar Zaman and Imam-ul-Haq broke the all-time opening partnership in ODI history. © AFP

சர்வதேச ஒருநாள் போட்டிகளில், அதிக ரன்களுக்கு ஜோடி சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் ஃபக்ஹர் ஸமான், இமாம்-உல்-ஹக் முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ஜிம்பாவே- பாகிஸ்தான் அணிகள் மோதும் சர்வதேச ஒரு நாள் போட்டிகள் ஜிம்பாவேயில் நடைப்பெற்று வருகின்றன. புலாவேயோ மைதானத்தில் இன்று நடைப்பெற்று வரும் நான்காவது ஒரு நாள் போட்டியில், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபக்ஹர் ஸமான், இமாம்-உல்-ஹக் ஆகியோர் இணைந்து 304 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த தொடக்க ஆட்டக்காரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு, இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில், இலங்கையின் தொடக்க வீரர்கள் சனத் ஜெயசூர்யா, உபுல் தரங்கா ஆகியோர் குவித்த 284 ரன்கள் சாதனையை பாகிஸ்தான் அணி வீரர்கள் முறியடித்துள்ளனர்.

 

 

2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடிய ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் ஜோடி 284 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

மேலும் சிறப்பாக, தொடக்க வீரர் ஃபக்ஹர் ஸமான், பாகிஸ்தான் அணியில் இருந்து ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு, 1997 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான போட்டியில், சயீத் அன்வர் குவித்த 194 ரன்கள், ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் வீரரின் அதிகபட்ச ரன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது


இந்தியாவை பொறுத்த வரை, 2001 ஆம் ஆண்டு கென்யாவிற்கு எதிரான போட்டியில், தொடக்க வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி 258 ரன்கள் குவித்தனர். இதுவே, இந்திய அணியின் முதல் விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர்களின் அதிக ரன்கள் ஆகும்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்து பாக்., வீரர் புதிய சாதனை
அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்து பாக்., வீரர் புதிய சாதனை
முதல் விக்கெட்டிற்கு 304 ரன்கள் குவித்து, பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் சாதனை!
முதல் விக்கெட்டிற்கு 304 ரன்கள் குவித்து, பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் சாதனை!
Advertisement