காயமடைந்த இமாம் உல் ஹக் உலகக் கோப்பைக்கு திரும்புவாரா?

Updated: 17 May 2019 23:43 IST

பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் உலகக் கோப்பைக்கு முன்பாக காயமடந்துள்ளார்

Pakistan
© AFP

பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் உலகக் கோப்பைக்கு முன்பாக காயமடந்துள்ளார். இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் உட் வீசிய பந்தில் காயமடைந்தார். ஆனால் அந்த வித எலும்பு முறிவும் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துடனான நான்காவது ஒருநாள் போட்டியில் 23 வயதான இவர் காயமடைந்து வெளியேறினார், 143 கி.மீ வேகத்தில் கையில் தாக்கப்பட்ட பந்து அவரை காய்மடைய செய்தது.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் 151 என்ற தனது ஒருநாள் போட்டிகளின் சிறந்த ஸ்கோரை பதிவு செய்திருந்தார், இந்த போட்டியில் காயமடைந்த இமாம் உல் ஹக் உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார்.

3 ரன்களில் காயமடைந்து வெளியேறிய இமாமுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அணி நிர்வாகம் கூறியுள்ளது. 48வது ஓவரில் மீண்டும் ஆட வந்த இமாம் ஆட்டம் முடியும் போது 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இங்கிலாந்து பாகிஸ்தானுக்கு எதிரான இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.

341 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 201/1 என்ற நிலையில் இருந்தது. 114 ரன்களுக்கு ஜேஸன் ராய் ஆட்டமிழந்ததும் 3 விக்கெட்டுகளை 7 ரன்களுக்குள் இழந்தது.

மொயின் அலி டக் அவுட் ஆக 316/5 என்ற நிலையை எட்டியது. ஆனால் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 71, டாம் குரான் 31 என இங்கிலாந்து வெற்றியை 3 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது.

மோசமான ஃபீல்டிங் தோல்விக்கு காரணம் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் கூறியுள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"பல பெண்களுடன் தொடர்பு" : பிசிபியிடம் மன்னிப்பு கேட்ட இமாம் உல் அக்!
"பல பெண்களுடன் தொடர்பு" : பிசிபியிடம் மன்னிப்பு கேட்ட இமாம் உல் அக்!
பல பெண்களுடன் சாட்டிங்: சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்
பல பெண்களுடன் சாட்டிங்: சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்
இந்தியா - பாகிஸ்தான் போட்டி: கவனிக்கத்தக்க வீரர இமாம் உல் ஹக்
இந்தியா - பாகிஸ்தான் போட்டி: கவனிக்கத்தக்க வீரர இமாம் உல் ஹக்
காயமடைந்த இமாம் உல் ஹக் உலகக் கோப்பைக்கு திரும்புவாரா?
காயமடைந்த இமாம் உல் ஹக் உலகக் கோப்பைக்கு திரும்புவாரா?
Advertisement