"என்னை சூதாட்டத்துக்கு அழைத்தார்" - குளோபல் டி20 லீக் போட்டி குறித்து பாகிஸ்தான் வீரர்!

Updated: 08 August 2019 18:07 IST

பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான உமர் அக்மல், தன்னை முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் குளோபல் டி20 தொடரில் சூதாட்டத்துக்கு அழைத்ததாக கூறியுள்ளார்.

Pakistan Cricketer Reports Match-Fixing Approach In Global T20 Canada
முன்னாள் கிரிக்கெட் வீரர் மன்சூன் அக்தர் தன்னை டி20 தொடரில் கிரிக்கெட் சூதாட்டத்துக்கு அழைத்ததாக அக்மல் கூறியுள்ளார் உமர் அக்மல். © AFP

பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான உமர் அக்மல், தன்னை முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் குளோபல் டி20 தொடரில் சூதாட்டத்துக்கு அழைத்ததாக கூறியுள்ளார். இந்த வருட போட்டியில் அக்மல் வின்னிபெக் ஹாக்ஸ் அணிக்காக ஆடுகிறார். பாகிஸ்தான் செய்தி நிறுவன தகவல்படி, முன்னாள் கிரிக்கெட் வீரர் மன்சூன் அக்தர் தன்னை டி20 தொடரில் கிரிக்கெட் சூதாட்டத்துக்கு அழைத்ததாக அக்மல் கூறியுள்ளார். 29 வயதான அக்மல் இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் குளோபல் டி20 லீக் நிர்வாகம் ஆகிய இரண்டுக்கும் தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. இதை விசாரித்து, இதுபோன்ற ஊழலை தடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

தகவல்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் லீக் போட்டியில் சம்மந்தம் இல்லை என்று கூறியுள்ளது.

மன்சூன் அக்தர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஆனால், விக்கிபெக் அணியின் அதிகாரியாக இருக்கிறார்.

பாகிஸ்தான் அணிக்காக அவர் 1980-1990 ஆண்டு வரை ஆடியுள்ளார். அவர் 19 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 41 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.

2019ம் ஆண்டு கனடா டி20 லீக் ப்ராம்ப்டனில் நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்கவுள்ளது.

வான்கூவர் நைட்ஸ், வின்னிபெக் ஹாக்ஸ், எட்மண்டன் ராயல்ஸ், மாண்ட்ரீல் டைகர்ஸ், டொராண்டோ நேஷனல்ஸ் மற்றும் ப்ராம்ப்டன் வுல்வ்ஸ் ஆகிய ஆறு அணிகள் லீக்கில் பங்கேற்கின்றன.

சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சமீபத்தில் ஓய்வை அறிவித்த யுவராஜ் சிங், டொராண்டோ நேஷனல்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.

நிறைய சிறந்த கிரிக்கெட்டர்கள், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்கள் முகமது ஹஃபீஸ், சோயிப் மாலிக் மற்றும் ஷாஹித் அஃப்ரிடி உட்பட  கனடா லீக்கில் இடம்பெற்றுள்ளனர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
உமர் அக்மலை அதிரடியாக இடைநீக்கம் செய்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
உமர் அக்மலை அதிரடியாக இடைநீக்கம் செய்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
அதிக பணிச்சுமை காரணமாக தென்னாப்பிரிக்கா பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு!
அதிக பணிச்சுமை காரணமாக தென்னாப்பிரிக்கா பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு!
பாகிஸ்தான் ஆதரவாளர்களை "விலங்குகள்" என்று அழைத்து ஏன்... விளக்கிய முன்னாள் வீரர்!
பாகிஸ்தான் ஆதரவாளர்களை "விலங்குகள்" என்று அழைத்து ஏன்... விளக்கிய முன்னாள் வீரர்!
விமானத்தில் கைக் கடிகாரத்தை இழந்த வாசிம் அக்ரம்!
விமானத்தில் கைக் கடிகாரத்தை இழந்த வாசிம் அக்ரம்!
"இருதரப்பு போட்டிகளை கங்குலி மீண்டும் தொடங்க முடியும்" - ரஷீத் லத்தீப்
"இருதரப்பு போட்டிகளை கங்குலி மீண்டும் தொடங்க முடியும்" - ரஷீத் லத்தீப்
Advertisement