ஆகஸ்ட் 20ம் தேதி நடக்கவிருக்கும் ஹசன் அலி-ஷாமியா அர்சூ திருமணம்!

Updated: 03 August 2019 13:21 IST

ஹசன் அலி ஆகஸ்ட் 20ம் தேதி ஷாமியா அர்சூவை துபாயில் திருமணம் செய்யவுள்ளதாக கூறினார். ஷாமியா, ஹரியானாவில் உள்ள தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

Hasan Ali To Tie Knot With An Indian National On August 20
ஹசன், ஹாமியாவை நெருங்கிய நண்பர் மூலம் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு துபாயில் சந்தித்துள்ளார். © AFP

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி (Hasan Ali), இந்திய பெண்ணை மணக்கவிருப்பதாக வந்த தகவல் இப்போது உறுதியாகியுள்ளது. கடந்த வெள்ளியிக்கிழமை அவர், ஆகஸ்ட் 20ம் தேதி ஷாமியா அர்சூவை துபாயில் திருமணம் செய்யவுள்ளதாக கூறினார். ஷாமியா, ஹரியானாவில் உள்ள தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவர் இங்கிலாந்தில் பொறியியல் படித்துவிட்டு இப்போது துபாயில் பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். குடும்பத்தினர் சிலர் டெல்லியிலும் உள்ளனர். "எங்கள் குடும்பத்தினர் இந்த விஷயத்தை பெரிதும் வெளிப்படுத்த விரும்பவில்லை. அதனால் தான் தகவல் எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. ஆனால், என் திருமணம் குறித்த வதந்திகள் பரவ தொடங்கிய பிறகு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்க நினைத்தேன்" என்று ஹசன் தன் சொந்த ஊரான குஜ்ரன்வாலா(பாகிஸ்தான்) செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

"நான் கறுப்பு மற்றும் சிவப்பு நிற ஷெர்வானி அணிகிறேன், அவர் இந்திய முறைப்படி உடை அணியவுள்ளார்," என்று ஹசன் கூறினார்.

ஹசன், ஹாமியாவை நெருங்கிய நண்பர் மூலம் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு துபாயில் சந்தித்துள்ளார். அதன்பின் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

இதற்கு முன்பு ஹசன் ஜூலை 30ம் தேதி, திருமணம் இன்னும் முடிவாகவில்லை, விரைவில் அதற்காக அறிவிப்பு வரும் என்று ட்விட் செய்திருந்தார்.

ஹசன், இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளிலும் 53 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார். 2017ம் ஆண்டு சேம்பியன்ஸ் ட்ராபியில் சிறப்பாக செயல்பட்டார்.

ஆனால், கடந்த சில வருடங்களில் அவரின் செயல்பாடு சரிந்துள்ளது. 25 வயதான இவர் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட முயன்றும் தோற்றதால், ஆடும் லெவனில் இருந்து பாதி தொடரில் வெளியேற்றப்பட்டார்.

பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் சோயிப் மாலிக் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை ஏப்ரல் 12, 2010ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அக்டோபர் 30, 2018ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு இஸான் மிர்சா-மாலிக் என்று பெயரிட்டனர்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஹசன் அலி ஷாமியா அர்சூவை துபாயில் திருமணம் செய்யவுள்ளார்
  • சோயிப் மாலிக் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை திருமணம் செய்தார்
  • இருவரும் அவர்கள் குழந்தைக்கு இஸான் மிர்சா-மாலிக் என்று பெயரிட்டனர்
தொடர்புடைய கட்டுரைகள்
"அவமானம்": ரேம்ப் வாக்கில் கலந்துகொண்ட ஹசன் அலியையை விமர்சித்த ரசிகர்கள்
"அவமானம்": ரேம்ப் வாக்கில் கலந்துகொண்ட ஹசன் அலியையை விமர்சித்த ரசிகர்கள்
"ஆண்டின் பெரிய ஜோக்" - பும்ராவை விமர்சித்த அப்துல் ரஸாக்கை சாடிய ரசிகர்கள்!
"ஆண்டின் பெரிய ஜோக்" - பும்ராவை விமர்சித்த அப்துல் ரஸாக்கை சாடிய ரசிகர்கள்!
களத்தில் கேப்டன் இருக்கும்போதே முடிவெடுத்த ஸ்மித்தை சாடிய இயான் சேப்பல்
களத்தில் கேப்டன் இருக்கும்போதே முடிவெடுத்த ஸ்மித்தை சாடிய இயான் சேப்பல்
மார்னஸ் லாபுசாக்னேவின் ஹெல்மெட்டில் பந்து தக்கியது!
மார்னஸ் லாபுசாக்னேவின் ஹெல்மெட்டில் பந்து தக்கியது!
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்: ஐஸ்லாந்து கிரிக்கெட்டால் கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்ட இமாம்-உல்-ஹக்!
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்: ஐஸ்லாந்து கிரிக்கெட்டால் கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்ட இமாம்-உல்-ஹக்!
Advertisement