துபாயில் நடந்த ஹசன் அலி-ஷாமியா அர்சூ திருமணம்... ட்விட்டரில் குவியும் வாழ்த்துகள்!

Updated: 21 August 2019 16:06 IST

25 வயதான இவர் தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து "பேச்சுலராக கடைசி நாள்" என்று பதிவிட்டார்.

Cricketer Hasan Ali Marries Shamia Arzoo In Dubai
இந்திய கிரிக்கெட் வீரர்களை தன் திருமணத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் ஹசன் அலி. © Twitter

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி இந்திய பெண்ணான ஷாமியா அர்சூவை நேற்று திருமணம் செய்தார். திருமணம் முடிந்த சில நேரத்தில் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் போட்டோ, வீடியோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தனர். 25 வயதான இவர் தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து "பேச்சுலராக கடைசி நாள்" என்று பதிவிட்டார். அதன் பின் "மருதாணி நிகழ்வு" வீடியோவை அவர் பகிர்ந்தார். "மருதானி நிகழ்வு இருக்கும் போது ஹசன் அலி டெசர்ட் சஃப்பாரியில் விக்கெட் எடுத்துக்கொண்டிருக்கிறார்," என்று பாகிஸ்தான் பத்திரிகையாளர் எழுதினார்.

ஹசன் அலியின் ட்விட்டுக்கு பதிலளித்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார்.  "வாழ்த்துக்கள் ஹசன், வாழ்நாள் முழுவதும் அன்பும் சந்தோஷமும் நிறைந்திருங்கள்...  இந்த முறை எங்களை அதிகம் கவனிக்க வேண்டியுள்ளது," என்று பதிவிட்டார் சானியா மிர்ஸா. அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களை தன் திருமணத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அனைவரும் வந்தால் தான் சந்தோஷமடைவதாகவும் கூறினார்.

முன்னர் கூறியபடி, 26 வயதான ஷாமியா ஹரியானாவைச் சேர்ந்தவர். அவர் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் விமானப் பொறியாளராக உள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள் புதுதில்லியில் உள்ளனர்.

இந்திய பெண்ணை மணந்த நான்காவது பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி. முன்னதாக ஜாஹீர் அபாஸ், மோசின் கான் மற்றும் சோயிப் மாலிக் ஆவர்.

ஹசன், இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளிலும் 53 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார். 2017ம் ஆண்டு சேம்பியன்ஸ் ட்ராபியில் சிறப்பாக செயல்பட்டார்.

ஆனால், கடந்த சில வருடங்களில் அவரின் செயல்பாடு சரிந்துள்ளது. 25 வயதான இவர் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட முயன்றும் தோற்றதால், ஆடும் லெவனில் இருந்து பாதி தொடரில் வெளியேற்றப்பட்டார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஹசன் அலி இந்திய பெண்ணான ஷாமியா அர்சூவை நேற்று திருமணம் செய்தார்
  • ரசிகர்கள் திருமண போட்டோ, வீடியோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தனர்
  • திருமண நிகழ்வின் போது அவர் வழக்கமாக கேட்ச் பிடிப்பதை போன்று செய்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
"நாங்கள் கணவன்-மனைவி இல்லை" - ஹசன் அலி குறித்த கேள்விக்கு சதாப் கானின் பதில்!
"நாங்கள் கணவன்-மனைவி இல்லை" - ஹசன் அலி குறித்த கேள்விக்கு சதாப் கானின் பதில்!
துபாயில் நடந்த ஹசன் அலி-ஷாமியா அர்சூ திருமணம்... ட்விட்டரில் குவியும் வாழ்த்துகள்!
துபாயில் நடந்த ஹசன் அலி-ஷாமியா அர்சூ திருமணம்... ட்விட்டரில் குவியும் வாழ்த்துகள்!
திருமணத்துக்கு முந்தைய நாளில் ஹசன் அலிக்கு வாழ்த்து சொன்ன சானியா மிர்ஸா!
திருமணத்துக்கு முந்தைய நாளில் ஹசன் அலிக்கு வாழ்த்து சொன்ன சானியா மிர்ஸா!
இந்திய பெண்ணை மணக்கும் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி!
இந்திய பெண்ணை மணக்கும் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி!
ஆசிய கோப்பை 2018: ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி
ஆசிய கோப்பை 2018: ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி
Advertisement